தெருவில் கிடந்த பையை சுற்றி எறும்பும் நாய்களும்!…திறந்து பார்த்தால்?..அதிர்ந்து போன போலீசார்கள்..

Photo of author

By Parthipan K

தெருவில் கிடந்த பையை சுற்றி எறும்பும் நாய்களும்!…திறந்து பார்த்தால்?..அதிர்ந்து போன போலீசார்கள்..

மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் நைகாவன் பாலம் அருகே மும்பை ஆமதாபாத் நெடுஞ்சாலையில் பெரிய அளவிலான பை ஒன்று கிடந்துள்ளது. அந்த பையை சுற்றி எறும்புகளும் நாய்களும் மோப்பப்பிடித்து கொண்ருந்தன.இதனை கண்ட அவ்வழியே சென்ற ஒரு நபர் அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் காவல் துறையினர் விரைந்து வந்தனர்.அந்த பையை விரித்து பார்த்ததில் மாணவியின் உடலை திணிக்கப்பட்டு இருப்பதை கண்டு  அதிர்ச்சி அடைந்தார்கள்.மேலும் மாணவியின் சடலம் பல இடங்களில் கத்தியால் குத்திய காயங்கள் இருந்துள்ளன.இதனை தொடர்ந்து வசாய் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அந்த மாணவியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

மேலும் மாணவியின்  கொலைக்காக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.விசாரணையில் அம்மாணவி 17 வயதுடையது என்பதும் அவர் மும்பையின் அந்தேரி பகுதியில்  தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.நேற்று காலையில் பள்ளிக்கு சென்ற மாணவி நேற்று மாலை வரை வீட்டு திரும்பி வரவில்லை.

இந்நிலையில் அவரது உறவினர்கள் பள்ளி மாணவி காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்கள்.இதனை தொடர்ந்து சிறுமியின் உடல் கிடைத்த நிலையில் கொலை வழக்கு பதிவு செய்து சிறுமியின் கொலைக்கான காரணங்களை போலீசார்கள் விசாரித்து வருகின்றனர்.மேலும் சிசிடிவி கேமரா மூலம் கொலையாளியை தேடி வருகின்றனர்.பையில் கொடூரமாக குத்திய நிலையில்  சடலமாக கிடந்த பள்ளி மாணவியை கண்ட அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.