இதை செய்தால் தூக்கம் சொக்கி கொண்டு வரும்!! மறக்காமல் இன்று இரவே ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Rupa

மனிதர்களுக்கு தூக்கம் மிக அவசியமான ஒன்று.ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேரம் உறங்கினால் மட்டுமே உடல் செயல்பாடு சீராக இருக்கும்.ஆனால் இன்று பலர் நிம்மதியான தூக்கம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

அதிகப்படியான வேலைப்பளு,மன அழுத்தம்,உடல் நலக் கோளாறு மேலும் சில பிரச்சனைகளால் நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் அவதியடைந்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்.

1.மாட்டு பால்
2.மிளகு
3.மஞ்சள் தூள்
4.பனங்கற்கண்டு

ஒரு கிளாஸ் மாட்டு பாலில் இரண்டு மிளகை தட்டி போட்டு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

பிறகு ஒரு கிளாஸில் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்த பாலை வடிகட்டி கலக்கி குடிக்கவும்.இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னர் இந்த பாலை குடித்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

1.பால்
2.ஜாதிக்காய்
3.தேன்

ஒரு ஜாதிக்காயை பவுடர் பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மில்லி பால் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க காய்ச்சவும்.பால் பொங்கி வரும் போது சிறிதளவு ஜாதிக்காய் பொடி சேர்த்து கொதிக்க வைத்து கிளாஸிற்கு வடிகட்டவும்.

பிறகு இதில் தேவையான அளவு தேன் கலந்து குடித்தால் தூக்கமின்மை பிரச்சனை சரியாகும்.

1.பால்
2.வாதுமை கொட்டை

அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைக்கவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் பால் சேர்த்து சூடாக்கவும்.

மற்றொரு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து வாதுமை கொட்டை சிறிதளவு போட்டு வறுக்கவும்.இதை ஆறவிட்டு பொடியாக்கி பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.