இதை செய்தால் 100% நரைமுடி பிரச்சனை தீரும்!

Photo of author

By Rupa

இதை செய்தால் 100% நரைமுடி பிரச்சனை தீரும்!

இந்தக் காலக்கட்டத்தில் சிறு வயதிலேயே நரைமுடி பிரச்சனை வந்துவிடுகிறது.இதற்கு காரணம் சத்து குறைபாடே காரணம்.அதுமட்டுமின்றி இந்த கால கட்டத்தின் உணவு முறைகளும் இதற்கு காரணமாக அமைகிறது.இதற்காக அனைவரும் மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். அதுமட்டுமின்றி இக்காலத்தில் உபயோக்கிக்கும் ஷாம்பு போன்ற இதர இரசாயன பொருட்களாலும் நரைமுடி வருவதை சிறுவயதிலேயே சந்திக்கின்றனர்.

இதற்கு பாட்டி வைத்தியம் தான் நிரந்தர தீர்வு.மனநெல்லிக்காயை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.மூகரட்டை எனப்படும் மூலிகைய பாலுடன் அரைத்து சாப்பிட்டு வர இளம் நரை ஏற்படாது.முடி கருப்பாக மாற கற்றாளை சாறு,நெல்லிக்காய் சாறு,தேங்காய் எண்ணையில் காய்ச்சி தடவி வர வேண்டும்.

நரைமுடி கருப்பாக கையாந்த கரைசாறு,பசு நெய்,தயிர் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலனைக் காண முடியும்.நெல்லிக்காயை எடுத்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்த்து தலையில் தடவி வர இளம் நரை முற்றிலும் குறையும்.அதன்பின் தலைகுளிக்கும் போது அதிக அளவு கெமிக்கல் இல்லாத ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.இதை வாரம் இருமுறை செய்ய இளம் நரை குறைவதை பார்க்க முடியும்.

அடுத்ததாக செக்கில் ஆட்டிய எண்ணையை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதை  அடுப்பில் சூட்டேற்றி  அதனுடன் சிறிதளவு கருவேப்பிலையையும்  சேர்த்து சூடு செய்து தலையில் தேய்த்து வர இளம் நரை முற்றிலும் காணமல் போகிவிடும்.அதிக அளவு சீயக்காயை பயன்படுத்துவதால் முடி நீளமாகவும்,கருமையாகவும் வளரும்.