நாம் மற்ற மாத்திரைகளின் பெயர்களை அறிந்து வைத்திருப்போமோ இல்லையோ ஆனால் Paracetamol என்ற மாத்திரையின் பெயரை அனைவரும் அறிந்திருப்போம். இந்த மாத்திரையை பெரும்பாலானோர் வருடத்திற்கு ஒரு முறை ஏனும் எடுத்திருப்பர். ஆனால் இன்னும் சிலர் அந்த மாத்திரைகளை கையில் எப்பொழுதும் வைத்துக் கொண்டே இருப்பர்.
பாரசிட்டமால் அனைத்து விதமான வலிகளையும் குணப்படுத்துகிறது என்பதனால் மருத்துவர்களும் இதனை பரிந்துரைக்கின்றனர். எனவே அனைத்து மக்களும் தலைவலியோ கால்வலியோ பேராசிட்டமால் எடுத்துக் கொள்ளலாம் என்று அதனை கையில் வைத்துக் கொண்டே இருக்கின்றனர். இத்தனை வலிகளை பாரசிட்டமால் தீர்த்தாலும் கூட அதனால் சில பின் விளைவுகளும் இருக்கிறது என்பது சில ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளது. அதனை பற்றி தற்போது காண்போம்.
நாம் பாரசிட்டமாலை எடுத்துக் கொள்ளும் பொழுது அது நமது செரிமான மண்டலத்திற்கு சென்று அங்கு கரைந்து பின்பு உடம்பின் அனைத்து பாகங்களுக்கும் பரவும். அவ்வாறு பரவும் பொழுது நமது உடம்பில் எங்கு வலி இருக்கிறதோ அந்த பாதிக்கப்பட்ட செல்லை பிளாக் செய்து விடும். அப்பொழுதுதான் நமக்கு இருந்த வலி காணாமல் போகும்.
அனைத்து விதமான வலிகளையும் பாரசிட்டமால் குறைத்தாலும் கூட அந்த மாத்திரியை எடுத்துக் கொள்பவர்களுள் பலரும் இன்று இறந்து வருகின்றனர். ஏனென்றால் அவர்கள் பாரசிட்டமாலை அதிக அளவிற்கு எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
இவ்வாறு அதிகமான அளவில் பாரசிட்டமாலை எடுத்துக் கொள்வதனால் அவர்களது செரிமான குழாயில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிரை இழப்பதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்று ஆராய்ச்சிகள் கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி அதிக அளவில் பாரசிட்டமாலை எடுத்துக் கொள்ளும் பொழுது அது நமது உடலில் NAPQI என்ற ஒரு விதமான நச்சு பொருளை ஏற்படுத்தும். அந்த நச்சு பொருட்களை நமது உடலில் உள்ள கிட்னி மற்றும் லிவரால் வெளியேற்ற முடியாமல் போய்விடும். ஆனால் இந்த பாரசிட்டமாலை சரியான அளவில் எடுத்துக் கொள்ளும் பொழுது இந்த நச்சு பொருள் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.
ஏற்கனவே கிட்னி மற்றும் லிவரில் பாதிப்பு உள்ளோர் அதிக அளவில் இந்த பாரசிட்டமாலை எடுத்துக் கொள்ளும் பொழுது இன்னும் அதிகமான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். மேலும் இந்த பாரசிட்டமால் நமது ரத்தத்தில் உள்ள அமில தன்மையை அதிகரித்து விடுவதாகவும் ஆராய்ச்சிகள் கூறியுள்ளது.
பாராசிட்டமாலை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் மட்டும் தான் பிரச்சனை என்று கூற முடியாது. சரியான அளவு எடுத்துக் கொண்டாலும் கூட அதனை மருத்துவரின் ஆலோசனையின் படியே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நமது உடலுக்கு பாரசிட்டமால் ஒத்து வருமா வராதா… கிட்னி மற்றும் கல்லீரலில் எந்த பாதிப்பும் இல்லையா.. என்பது நம்மை பரிசோதித்த மருத்துவருக்கு மட்டுமே தெரியும்.
தற்போது நமது உடலில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றால் அதன் ஆரம்ப கட்டத்திலேயே நமக்கு தெரிய வராது. அந்த பிரச்சனை பாதி நிலைக்கு சென்ற பிறகுதான் தெரிய வரும். இதனால்தான் மருத்துவரின் ஆலோசனை இன்றி பாரசிட்டமாலை அதிக அளவிற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது.