தீண்டாமை சுவர் கட்டும் குஜராத் அரசு! இது தான் குஜராத் மாடலா?
டிரம்ப் வருகைக்காக குஜராத்தில் கட்டப்பட்டு வரும் தீண்டாமை சுவர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக குஜராத் அரசு ரூ.100 ஒதுக்கி தீவிரமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெனிலா டிரம்ப் இருவரும் வரும் 24ம் தேதி முதன் முதலாக இந்தியா வருகின்றனர்.
பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் டிரம்பிற்கு 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க உள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் பயணமாக வரும் அதிபர் டிரம்ப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் அரங்கத்தை புதுப்பித்து கட்டப்பட்டுள்ள மொடேரா விளையாட்டு அரங்கத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் திறந்து வைக்கிறார்.
முன்னதாக புகழ்பெற்ற காந்தி ஆசிரமத்தை பார்வையிட உள்ளார் டிரம்ப். பின்னர் இரு தலைவர்களும் திறந்த வாகனத்தில் 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்கின்றனர். குஜராத்தில் நடக்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் டிரம்ப் உரையாற்ற உள்ளார்.
இதற்காக பிரமாண்ட சுவர் ஒன்று கட்டப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த சுவருக்கு பின்னாள் பல ஆயிரம் குடிசைப்பகுதிகள் உள்ளன. டிரம்ப் வருகைக்காக குடிசைப் பகுதிகளை மறைப்பதாக குஜராத் அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளது.
பிரதமர் மோடியின் குஜராத் மாடல் இது தானா என சர்வதேச ஊடகங்கள் முதல் உள்ளூர் ஊடங்கள் வரை கேள்வி எழுப்பியுள்ளது.