அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஆஃபர்களை அள்ளிக்கொடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்! காரணம் இது தானாம்!

0
204

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் ரிபப்ளிகன் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து  டெமாக்ரடிக் கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

இருவரும் தற்போது பிஸியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அமெரிக்காவில் குறிப்பிட்ட சில மாகாணங்களில் இந்திய வம்சாவளி இந்தியர்களின் வாக்குகள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறது. இந்தியர்களின் வாக்குகளை கவர இரு கட்சிகளும் தீவிரமாக போட்டாபோட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி போன்ற இந்திய விழாக்களுக்கு ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஜோ பைடன் தனது துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் எனும் இந்திய பின்னணி கொண்டவரை தேர்வு செய்துள்ளார்.

டோனால்ட் டிரம்ப்  இந்தியர்களை கவர்வதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார். மோடியும், டொனால்ட் ட்ரம்ப் சேர்ந்து இருக்கும் படங்களை வைத்து பிரச்சாரம் செய்து இந்திய அமெரிக்கர்களை கவர்ந்து வருகின்றனர் ரிபப்ளிகன் கட்சி.

இந்திய மக்களைக் கவர அமெரிக்காவில் மிக முக்கியமான விவகாரமாக உள்ளது எச்1பி விசா. இந்த விசா அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெற வழங்கப்படுகிறது. ஆனால் இந்த  விசாவால் அதிகம் பயனடைவோர் இந்தியர்களே.

கொரோனா காரணமாக எச்1பி விசாகளுக்கு டிரம்ப் அரசு தற்கால தடையை விதித்தது. ஆனால் தேர்தல் நெருங்கிய போது விசா கட்டுப்பாடுகளை படிப்படியாக குறைந்தது. மறுபுறம்  ஜோ பைடன் தான் ஆட்சிக்கு வந்தால் எச்1பி  விசா கட்டுப்பாடுகள் விளக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஹெச்-1பி விசா மூலம் வேலை பெற்றவர்களுக்க்கு பயிற்சியளிப்பதற்காக 150 மில்லியன் டாலரை (ரூ.1,100 கோடிக்கு மேல்) ட்ரம்ப் அரசு ஒதுக்கியுள்ளது. தேர்தலை குறிவைத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்புகளை கேட்ட அமெரிக்காவாழ் இந்தியர்கள் சந்தோஷமாக துள்ளிக்குதித்து கொண்டிருக்கின்றனர்.

Previous articleபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வருங்கால கணவருடன் செய்யும் ரொமான்ஸ் லீலைகள்!
Next articleஇந்திய ஆய்வுக் குழுவிற்கு ரூ.75 லட்சம் பரிசு !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here