தேவையில்லாத கேள்விகளை கேட்க வேண்டாம்!! செய்தியாளர்களிடம் கோவப்பட்ட யோகி பாபு!!

Photo of author

By Gayathri

யோகி பாபு என்று அழைக்கப்படும் நடிகர் பாபு லொள்ளு சபையில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார் , மேலும் இரண்டு ஆண்டுகள் காட்சிகள் எழுத உதவினார். அவர் தனது முதல் திரைப்படமான அமீர் -நடித்த யோகி (2009) இல் ஒரு ஆர்வமுள்ள நடிகராக அறிமுகமானார். அதன்பின் பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த இவர் காக்கா முட்டை படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே காமெடி நடிகராக பதிய துவங்கினர்.

இவ்வாறு சினிமா துறையில் தன்னுடைய வாழ்க்கையை துவங்கிய யோகி பாபு அவர்கள் அதன் பின் பல முன்னணி திரைப்படங்களில் காமெடி நடிகராக மட்டுமின்றி கதை நாயகனாகவும் நடித்த அசத்தியவர். இவர் பெரும்பாலும் கடவுளிடையே பக்தி கொண்டவராகவே அனைவராலும் பார்க்கப்படுகிறார்.

கடவுளை தொழுவது என்பது அவரவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றாலும் இவருடைய கடவுள் பக்தி என்பது மக்களை பிரமிக்க வைக்கும் ஒன்றாகவே உள்ளது. ஏனெனில் மற்ற நடிகர்களை காட்டிலும் இவர் அதிக அளவில் திருப்பதி திருத்தணி பழனி போன்ற பல சிறப்பு மிக்க ஸ்தலங்களுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் யோகி பாபுவிடம் நீங்கள் அதிக அளவில் கைகளில் கயிறுகளை கட்டி உள்ளீர்களே இதற்கு என்ன காரணம் என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கோவமுடன் யோகி பாபு அவர்கள் அளித்த பதில் பின்வருமாறு :-

கோவில்களில் சாமி பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்டு கயிறுகள் வழங்கப்படுவதும் அதனை பக்தர்கள் வாங்கி பக்தியுடன் கைகளில் கட்டிக் கொள்வதும் நம்முடைய தமிழ்நாட்டில் மட்டும் இன்றி மேலும் பல இடங்களில் சாதாரண விஷயமாகவே உள்ளது. அப்படி இருக்கும் பொழுது யோகி பாபு அவர்கள் அதிக அளவில் தன்னுடைய கைகளில் மற்றும் கழுத்தில் சாமி டாலர்கள் மற்றும் கயிறுகளை அணிந்திருப்பது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கோவமுடன் நடிகர் யோகி பாபு அவர்கள் , ” இது எல்லாம் கடவுள் விஷயம். இதனை நம்முடைய முன்னோர்கள் நமக்கு வழங்கி சென்றுள்ளனர். இதுகுறித்து மேலும் எந்தவித கேள்வியையும் கேட்காதீர்கள்” என பதிலளித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக இது இந்த இடத்திற்கு தேவையான கேள்வி இல்லை எனவே தேவையற்ற கேள்விகளை கேட்க வேண்டாம் எனவும் பத்திரிக்கையாளர்களிடம் நடிகர் யோகி பாபு அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.