பயப்பட வேண்டாம்.. வருமான வரித்துறையினர் வரமாட்டார்கள்!! கிண்டலாக பேசிய பிரதமர் மோடி!!

0
6
Don't be afraid.. the Income Tax Department will not come!! Prime Minister Modi spoke sarcastically!!
Don't be afraid.. the Income Tax Department will not come!! Prime Minister Modi spoke sarcastically!!

ஏப்ரல் 8 ஆகிய நேற்று பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் குறித்து தன்னுடைய இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 10 ஆண்டுகள் திட்டம் துவங்கப்பட்டு நிறைவடைந்ததை ஒட்டி பயனாளிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியது பின்வருமாறு :-

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி ஒருவரிடம் உங்களுடைய மாத வருமானம் எவ்வளவு என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். அப்பொழுது பதில் சொல்ல தயங்கிய பயனாளியை பார்த்து என் அருகில் தான் நிதியமைச்சர் அமர்வார் அவரிடம் நான் சொல்லி விடுகிறேன். பயப்பட வேண்டாம் உங்களுடைய மாத வருமானத்தை தைரியமாக சொல்லுங்கள். நான் வருமானவரித்துறையிடம் சொல்ல மாட்டேன் என கிண்டலாக நரேந்திர மோடி அவர்கள் பேசியுள்ளார்.

அதன் பின்பு, சிறிய தயக்கத்துடன் அந்த பயனாளி தன்னுடைய மாத வருமானம் ரூ.2.5 லட்சம் என தெரிவித்திருக்கிறார். இந்த முத்ரா யோஜனா திட்டமானது தொழிலில் பின்தங்கி இருக்கக்கூடிய சிறு மற்றும் குறு தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவும் அவர்களின் தொழிலில் அவர்கள் முன்னேறுவதற்கும் உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சிறு குறு தொழிலாளர்கள் மட்டுமே நலிவடைந்த தொழிலாளர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்படலாம் என்றும் இந்த திட்டத்தின் மூலமாக 10 லட்சும் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார் நரேந்திர மோடி. இந்தியாவில் உள்ள ஏழை எளிய தொழிலாளர்கள் தங்களுடைய தொழில்களை மேம்படுத்த நினைப்பின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் இணைந்த பயன் பெற்றுக் கொள்ளலாம்

Previous articleடோல் கேட்டுகளில் கூடுதல் கட்டண முறையை தடுக்க.. புதிய வழிமுறை!! மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கேரி!!
Next articleசீமானிடம் இருந்து கத்தி பறிமுதல்!. விமான நிலையத்தில் பரபரப்பு!.. வாட் புரோ!…