இது தெரியாமல் காதுகளில் உள்ள மெழுகு அழுக்கை சுத்தம் செய்யாதீர்கள்!! ஆபத்தாக மாறும் பழக்கம்!!

Photo of author

By Gayathri

காதுகளில் உள்ள அழுக்குகளை நீக்குவதாக எண்ணி அதற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வேலைகளை பலர் செய்து வருகின்றனர்.பட்ஸ்,ஊக்கு போன்றவற்றை பயன்படுத்தி காதுகளில் உள்ள அழுக்குகளை நீக்குவது நல்ல பழக்கம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்னர்.இது முற்றிலும் ஆபத்தான பழக்கமாகும்.

காதுகளில் அதிகளவு அழுக்கு சேர்ந்தால் குடைச்சல்,நமைச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதனால் காதுகளில் உள்ள அழுக்குகளை பட்ஸ் வைத்து உடனடியாக நீக்கிவிடுகிறார்கள்.சிலர் பட்ஸ் பயன்பாட்டிற்கு அடிமையாகி இருப்பார்கள்.இது காது குழாய் ஆரோக்கியத்தை முற்றிலும் பாதிக்கச் செய்யும் செயலாகும்.

காதுகளில் உருவாகும் மெழுகு போன்ற அழுக்கு கொலஸ்ட்ரால்,கொழுப்பு அமிலங்களால் உண்டாகிறது.இந்த மெழுகு அழுக்கை சுத்தம் செய்ய பட்ஸ்,கோழி இறகு,பின் ஊக்கு போன்ற்வற்றை பயன்படுத்தினால் அது காது வலி,ஜவ்வு பாதிப்பு போன்வற்றை ஏற்படுத்திவிடும்.காதுகளில் மெழுகு அழுக்கு இருந்தால் அதை வெளியேற்ற பட்ஸ்,குச்சிகளை பயன்படுத்தினால் அது அழுக்குகளை உள்ளே அழுத்திவிடும்.இதனால் காதுகளில் வலி உண்டாகும்.இதுபோன்ற தவறுகளை செய்யக் கூடாது.

காதுகளில் அளவிற்கு அதிகமாக அழுக்கு படிந்தால் அது வெளியில் தெரியும்.அப்பொழுது ஒரு காட்டன் துணி வைத்து காது குழாய்களை சுத்தம் செய்யலாம்.குச்சி போன்ற ஆபத்தான பொருட்களை கொண்டு காது குழாய்களை சுத்தம் செய்தால் அது காது ஜவ்வை சேதப்படுத்தி கேட்கும் திறனை குறைத்துவிடும்.எனவே இனி காதுகளில் உள்ள மெழுகு அழுக்கை பட்ஸ்,குச்சிகள் கொண்டு சுத்தம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.