மும்மொழிக் கொள்கை வேண்டாம் என கூறக்கூடிய அனைத்து திமுக மற்றும் மற்ற அரசியல் கட்சியினரின் உடைய பெயரிலும் சிபிஎஸ்சி பள்ளிகள் செயல்படுவதாகவும் அந்த பள்ளிகளில் முன்மொழிக் கொள்கை பின்பற்றப்படுவதாகவும் அண்ணாமலை அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும் குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் சென்னை வேளச்சேரியில் இருக்கக்கூடிய ப்ளூ ஸ்டார் பள்ளியின் நிர்வாக குழு தலைவராக பதவி வகிக்கிறார் என்றும் அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை வேண்டாம் எனக் கூறக்கூடிய அனைவரும் தங்களுடைய பெயர்களில் பள்ளிகளை நடத்தி வருகின்றனர் என அண்ணாமலை அவர்கள் தெரிவித்ததற்கு திருமாவளவன் அவர்கள் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
திருமாவளவன் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ஒவ்வொரு நாளும் ஊடகங்களினுடைய பரபரப்புக்காக ஒவ்வொன்றை பேசிக்கொண்டு இருப்பதாகவும் அவர் ஊடக கவன ஈர்ப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் அரசியலில் நாகரீக அணுகுமுறை என்பதை முற்றிலுமாக அண்ணாமலை தவிர்த்து விட்டதாகவும் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற நிலைப்பாட்டை வைத்து அரசியல் செய்வதாகவும் திருமாவளவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
மேலும் தன் மீது சாட்டப்பட்ட குற்றத்தை குறித்து அவர் பேசுகையில், எங்களுடைய இடத்தில் ஒரு நிறுவனமானது அனுமதி கேட்டதே தவிர அதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என்றும் வகுப்புகள் தொடங்கப்படவில்லை என்றும் அந்த பள்ளியில் ஒரு மாணவர்கள் கூட சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். ஏதோ ஒரு இடத்தில் என் பெயர் கிடைத்து விட்டதால் அதை அண்ணாமலை அவர்கள் தன்னுடைய இஷ்டத்திற்கு பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
குறிப்பாக, தமிழ்நாட்டு மாணவர்களின் உடைய படிப்பில் இவ்வளவு அக்கறை செலுத்தக்கூடிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ஏன் மத்திய அரசிடம் பேசி கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொடுக்கவில்லை ?? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். தேவையின்றி மும்மொழிக் கொள்கையை திணிப்பதை மட்டுமே பேசிக் கொண்டிருக்கக் கூடிய அண்ணாமலை அவர்கள் மத்திய அரசிடம் பேசி தமிழகத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளுக்கு நிதி உதவியை பெற்றுக் கொடுத்திருக்கலாமே என்று கேள்வி ஏற்புடையதாக அமைந்திருக்கிறது.