திருஷ்டி பொருளை மிதித்தால் என்ன நடக்கும்? அதன் பிறகு செய்ய வேண்டியது என்ன?

0
110

அமாவசை, பௌர்ணமி இல்லை நல்ல காரியம் முடிந்தால் கூட திருஷ்டி கழிப்பார்கள். காரணம் எந்த ஒரு தீங்கும் நடக்க கூடாதென்று தான்.

அப்படி அந்நாளில் திருஷ்டியை கழிக்க பொருட்கள் வாங்கி வீட்டில் உள்ளோருக்கு சுற்றி விட்டு வெளியில் முச்சந்தியில் போய் போடுவார்கள். அதை யார் மிதித்தாலும் கவலை இல்லை என வீசிவிட்டு சென்று விடுவார்கள்.

ஆனால் அப்படி மிதித்தல் நல்லது அல்ல. கால்வலி உடல் வலி ஆகியவை வந்துவிடும். ஒரு சிலர் பிரம்மை பிடித்தவர் போல ஆகிவிடுவார்கள்.

இதனால் என்ன பதிப்புகள் நடைபெறும் ? எப்படி தப்பிப்பது ? என்றுதான் இந்த பதிவு.

 

அன்றைய காலத்தில் செருப்பு அணியாமல் நடந்து செல்வார்கள் அப்பொழுது அவர்களது கவனம் பாதையில் இருக்கும். அதை பார்த்தவுடன் ஒதுங்கி செல்வார்கள். ஆனால் இன்றோ அதை ஒரு பொருட்டாகவே பயன்படுத்தாமல் மிதித்து நடக்கிறார்கள்.இப்படி குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை மிதித்து நடந்தால் சீக்கிரமாக நோய்வாய் படுவார்கள். வாகனங்களில் செல்லும் பொழுது திருஷ்டி கழித்து இருப்பதை பார்த்து விட்டு அதன் மேல் ஏற்றிச் சென்றால் கெட்ட எண்ணங்கள் பதிந்துவிடும். மனக்கஷ்டம், பணக்கஷ்டம் சோர்வு உடல் வலி கால் வலி தலைவலி என ஆரோக்கியத்திலும் குறைபாடுகள் ஏற்படும். இதுபோன்ற பிரச்சினைக்கு தீர்வு என்னவென்று பார்ப்போம்.

 

1. முந்தைய காலத்தில் வெளியே சென்றவர்கள் வீட்டிற்கு உள்ளே வரும்பொழுது கால்களை நன்றாக கழுவி விட்டு உள்ளே வருவார்கள். அப்படி கால்களை கழுவினால் கிருமிகள் திருஷ்டி அனைத்தும் வெளியே தங்கி விடும்.

2. அந்த தண்ணிரில் சிறிதளவு பச்சை கற்பூரம், மஞ்சள், ஒரு கொத்து வேப்பிலை போட்டு வையுங்கள்.

3. குளிக்கும் போதும் இதை சேர்த்து குளியுங்கள்.

4. வாகனங்கள் வைத்திருப்பர் இந்த தண்ணீரை வாகனங்கள் மீது தெளிக்கும் பொழுது அந்த பாதிப்பு விலகி விடும்.

மஞ்சம் மற்றும் வேப்பிலை நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவை. அதனால் கேட்ட சக்திகள் நெருங்காது.

author avatar
Kowsalya