தியேட்டரில் இதை செய்யாதீர்கள்!! மீறினால் சிறை தண்டனை!!

தியேட்டரில் இதை செய்யாதீர்கள்!! மீறினால் சிறை தண்டனை!!

மாநிலங்களவை தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அனுராக் தாகூர் ஆவார். இவர் சில நாட்களுக்கு முன்பு ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மசோதா குறித்து பதில் கூறிய அவர், திரைப்படங்களை தியேட்டரில் இருந்து திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வெளியிடுகிறார்கள். இதனால் ஒரு ஆண்டிற்கு இருபது ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது.

இவ்வாறு திரைப்படங்களை திருட்டுத்தனமாக எடுத்து வெளியிடுவது ஒரு புற்றுநோய் போன்று கொடிதானது. எனவே, இதை வேரோடு அழைக்க இந்த மசோதா கண்டிப்பாக உதவும் என்று கூறி உள்ளார்.

தியேட்டரில் படங்களை வீடியோ எடுத்து வெளியிடுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். மேலும், அந்த திரைப்படத்தின் தயாரிப்பிற்கு எவ்வளவு செலவு ஆனதோ அதில் ஐந்து சதவிகிதத்தை அபராத தொகையாக விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்யும் என்று கூறி உள்ளார்.

ஒவ்வொரு திரைப்படங்களுக்கும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமானது யுஏ சான்றிதழ் வழங்கம். அவ்வாறு வழங்கப்படும் சான்றிதழை வயது வாரியாக யுஏ 7 பிளஸ், யுஏ 13 பிளஸ் மற்றும் யுஏ 6 பிளஸ் என்ற அடிப்படையில் வழங்கவும் அறிவுறுத்தி வருகிறது.

எனவே, இனி அனைத்து தியேட்டர்களிலும் திருட்டுத்தனமாக படத்தை பிரதி எடுப்பவர்களுக்கு கடுமையான சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது. திருட்டு படங்களை எடுத்து இணையத்தில் பதிவிடுபவர்களுக்கும் கண்டிப்பாக சிறை தண்டனை வழங்கப்படும்.