கல் உப்பை வைத்து இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

0
258

நாம் பயன்படுத்தக்கூடிய கல் உப்பை வைத்து இதை மட்டும் செய்துவிடக்கூடாது. நமக்கு வரும் பல கஷ்டங்கள் பல மடங்கு அதிகரிக்குமாம்.

நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் உள்ள கண் திருஷ்டிகள் நீங்க கல் உப்பை பயன்படுத்துவார்கள். மேலும் நம் கண்ணுக்குப் புலப்படாத துர்சக்திகளை தனக்குள் இழுத்துக் கொள்ளும் தன்மையை உடையது கல்லுப்பு.

அதேபோல் நோய்க் கிருமிகள் அழிய, கண் திருஷ்டிகள் விலக,வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறையான எண்ணங்கள் அகல ஆன்மீகத்தில் கல் உப்பை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

இப்படி பயன்படுத்தக் கூடிய கல் உப்பை நாம் தவறாக பயன்படுத்தி விட்டால் நமக்கு வரும் கஷ்டங்கள் பன்மடங்கு உயரும் என்பது பெரியோர்கள் வாக்கு.

இப்பொழுது கல் உப்பை எதற்கு எல்லாம் பயன்படுத்தக் கூடாது என்பதை பார்ப்போம்.

1. ஒரு சிலர் வீட்டை துடைக்கும் பொழுது ஒரு பிடி கல் உப்பை தண்ணீரில் போட்டு வீட்டை துடைப்பர். அதனால் வீட்டில் உள்ள நோய்க் கிருமிகளும், வீட்டிலுள்ள
துர்சக்திகளும், எதிர்மறையான எண்ணங்களும் நீங்கும் என்பதற்காக இது மாதிரி செய்வார்கள்.

அனைத்து நாட்களுக்கும் இது பொருந்தும் ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் இதுபோன்று கல் உப்பை வீடு துடைப்பதற்காக கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.

அப்படி செய்யும் பொழுது வீட்டில் உள்ள பிரச்சனைகள் பன்மடங்கு உயரும் வாய்ப்பு உள்ளதாம். மேலும் எதிர்மறையான எண்ணங்கள் இரட்டிப்பாகும்.நிம்மதி குறையும், சண்டை வரும், வீட்டில் சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் கொண்டு போய் முடியும்.

2. ஒரு சிலருக்கு குளிக்கும் தண்ணீரில் கல் உப்பைப் பயன்படுத்தி குளிக்கும் வழக்கம் இருக்கும். அதேபோல் ஒரு சிலர் ஞாயிற்றுக்கிழமைகளில் தலைக்கு குளிக்கும் பழக்கம் இருக்கும். அலுவலக வேலை காரணமாக நேரம் இல்லாததால் ஒரு சிலர் ஞாயிற்றுக்கிழமைகளில் தலைக்கு குளிப்பார்கள்.

அப்படி ஞாயிற்றுக்கிழமைகளில் தலைக்கு குளிக்கும் போது கல் உப்பைப் பயன்படுத்தி தலைக்குக் குளிக்கக் கூடாது. அப்படி பயன்படுத்தும்பொழுது மனரீதியான பிரச்சனைகள் அதிகமாக வரும். உடல் நோய்கள் அதிகமாகும்.

3. அதேபோல் வீட்டில் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களை நீக்க நாம் படுக்கும் கட்டிலுக்கு அடியில் கல்லுப்பு கலந்த தண்ணீரை தென்மேற்கு மூலைகளில் வைப்போம். அதுபோல் பல இடங்களில் வைப்போம்.

அப்படி வைத்த தண்ணீர் கருமையாக மாறினாலோ அல்லது தூசு படிந்தாலோ, குறைந்திருந்தாலோ அதை உடனடியாக நீக்கி விட வேண்டும். கல் உப்பு போட்ட தண்ணீரை ஒரு நாளுக்கு மேல் அதை பயன்படுத்தவே கூடாது. அப்படி பயன்படுத்தினால் எதிர்மறையான எண்ணங்கள் அங்கேயே தங்கிவிடும்.

இதுபோன்ற உப்பு பரிகாரங்களை முறையாக பயன்படுத்த வேண்டும். நாம் முறைதவறி பயன்படுத்தும் பொழுது நமக்கே அந்த எதிர்மறையான எண்ணங்களும், மனரீதியான குழப்பங்களும் வரும் என்பது ஐதீகம்.

Previous articleபெண் குழந்தையை கர்ப்பம் தரிக்கும் பெண்ணுக்கு வயிறு பெரிதாக இருக்குமா..!!
Next articleஎன்னை அடித்தே கொல்வதாக இயக்குனர் மிரட்டினர்.. அதனால் தான் சூரியவம்சம் படத்தில் பேரனாக நடிக்க முடியவில்லை!!