இன்றைய காலத்தில் 30 வயதை தாண்டாதவர்கள் கூட கால்சியம் சத்து குறைபாட்டை சந்திக்கின்றனர்.உடலில் கால்சியம் சத்து குறையும் பொழுது எலும்பு சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும்.அதாவது எலும்பு வலி,மூட்டு பகுதியில் வலி,சிறிது தூரம் நடந்தாலே கால் வலித்தல்,முதுகு வலி போன்றவை கால்சியம் குறைபாட்டால் ஏற்படுகிறது.
தற்பொழுது உடல் ஆரோக்கியத்தின் மீது யாரும் அக்கறை கொள்வதில்லை.இதன் காரணமாக பலரும் மூட்டு வலி,எலும்பு தொடர்பான பாதிப்பை சந்திக்கின்றனர்.இளம் வயதிலேயே இதுபோன்ற பிரச்சனைகளை சந்திப்பவர்கள் முதுமை காலத்தில் மோசமான விளைவுகள் ஏற்படக் கூடும்.நீங்கள் எதிர்காலத்தில் கால்சியம் பற்றக்குறையை சந்திக்க கூடாது என்றால் நிச்சயம் இளம் வயதிலேயே உரிய உணவுமுறை பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
கால்சியம் சத்து:
பாலில் அதிகளவு கால்சியம் சத்து இருப்பது என்பது நம் அனைவரும் அறிந்த ஒரு விஷயமாகும்.பாலில் இருந்து தயாரிக்கப்படும் சீஸ்,பனீர் போன்ற பொருட்களிலும் அதிகளவு கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.
சிலருக்கு பால் அலர்ஜியாக இருக்கலாம்.அதேபோல் சிலருக்கு பால் வாசனையே பிடிக்காமல் இருக்கலாம்.இவர்கள் எல்லாம் பாலுக்கு இணைய கால்சியம் சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
பழங்கள்,காய்கறிகள் மூலம் கால்சியம் சத்து எடுத்துக் கொள்ளலாம்.நாம் அடிக்கடி உண்ணும் பழங்களில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.
பேரிக்காய்
100 கிராம் பேரிக்காயில் கிட்டத்தட்ட 56 மில்லி கிராம் அளவிற்கு கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.
கிவி
100 கிராம் கிவி பழத்தில் கிட்டத்தட்ட 34 மில்லி கிராம் அளவிற்கு கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.
பப்பாளி பழம்
100 கிராம் பப்பாளி பழத்தில் கிட்டத்தட்ட 20 மில்லி கிராம் அளவிற்கு கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.
அன்னாசி பழம்
100 கிராம் பேரிக்காயில் கிட்டத்தட்ட 13 மில்லி கிராம் அளவிற்கு கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.
கொய்யாப்பழம்
ஒரு கொய்யா பழத்தில் கிட்டத்தட்ட 18 மில்லி கிராம் அளவிற்கு கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.
ஆரஞ்சு
100 கிராம் ஆரஞ்சு பழத்தில் கிட்டத்தட்ட 43 மில்லி கிராம் அளவிற்கு கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.ஒரு கிளாஸ் ஆரஞ்சு பழச்சாறில் கிட்டத்தட்ட 140 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.
பேஷன் பழம்
100 கிராம் பேஷன் பழத்தில் கிட்டத்தட்ட 12 மில்லி கிராம் அளவிற்கு கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.