இதயத்துடிப்பை குறைக்கும் இந்த தண்ணீரை குடிக்காதீர்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை
கோடைகாலம் ஆரம்பிக்கவுள்ளதால் அதிகம் தாகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தாகத்தை தீர்க்க பெரும்பாலோனோர் ஐஸ் வாட்டரை தான் பெரும்பாலும் குடிக்க நினைப்பார்.ஆனால் அதிக குளிர்ச்சியுடன் இருக்கும் இந்த ஐஸ் தண்ணீரை குடிப்பதால் உடலில் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.
கோடைகாலம் ஆரம்பித்ததும் பிரிட்ஜ் இல்லாதவர்கள் கூட உடனடியாக வாங்க முயற்சிப்பார்கள்.அந்த அளவிற்கு இந்த ஐஸ் தண்ணீரின் மீது மக்களுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது.பெரும்பாலோனோர் வெயில் காலம் அல்லாத நேரத்தில் கூட தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை அதிக குளிர்ச்சியுடன் தான் குடிக்க விரும்புவர்.இவ்வாறு அதிக குளிர்ச்சியுடன் தண்ணீரை குடிப்பதால் என்ன தீமை ஏற்படும் என்று இந்த பதிவில் காணலாம்.
கோடை காலம் அல்லது மற்ற நேரங்களில் நாம் குளிர்ச்சியான தண்ணீரை குடிக்கும் போது இதயத்திற்கு செல்லும் நரம்பு மண்டலங்களை பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இதனால் நமது உடலில் இதய துடிப்பும் குறையும் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்த மாதிரி நேரங்களில் நாம் ஐஸ் தண்ணீரை குடித்தவுடன் அப்போதைக்கு தாகம் அடங்கியது போல தெரிந்தாலும் மீண்டும் உடனடியாக தாகம் ஏற்படும்.இதற்கு காரணம் என்னவென்றால் உடல் சூட்டை தணிப்பதற்காக அதிக நீரை உறிஞ்சி நீர் பற்றாக்குறையை நமது உடலில் ஏற்படுத்துவதே.அதனால் அனைவரும் முடிந்த வரை சாதாரண தண்ணீரை குடிக்க பழகிக் கொள்ளுங்கள்.