எதிர்பார்ப்பை அதிகமா வச்சுக்கோங்க! வெளிவந்த லியோ படத்தின் ஸ்கிரிப்ட் ! 

0
265
#image_title

எதிர்பார்ப்பை அதிகமா வச்சுக்கோங்க! வெளிவந்த லியோ படத்தின் ஸ்கிரிப்ட் ! 

படம் பயங்கரமாக இருக்கும் என லியோ படத்தில் வசனகர்த்தா & லோகேஷ் கனகராஜ்  நண்பர் கூறியுள்ளார்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணி லியோ என்ற படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. இதையடுத்து இயக்குனர் ரத்தினகுமார் லியோ படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளதை உறுதிப்படுத்தியதுடன், மொத்த ஸ்கிரிப்டையும் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

லியோ படத்தின் சூட்டிங் சென்னையில் தொடங்கி கொடைக்கானல் மற்றும் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு காஷ்மீருக்கு தனி விமானத்தில் சென்றுள்ளனர். அப்படி எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் படத்தின் டைட்டில் வெளியாகி செம டிரெண்டிங் ஆனது.

தொழில்நுட்ப கலைஞர்கள் நடிகர் நடிகைகள் உள்ளிட்டோர் விவரங்களை அண்மையில் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில்  வெளியிட்டது வைரலாகி வருகிறது. மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் நெருங்கிய நண்பர் இயக்குனர் ரத்தினகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளார். படம் நீங்கள் எதிர்பார்த்ததை விட பயங்கரமா இருக்கும். என்று கூறியுள்ளது படத்தின் மீதான ஆர்வத்தை ரசிகர்களுக்கு தூண்டியுள்ளது. லியோ படம் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே தரும் என்று அவர் கூறியது மேலும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

மேலும் இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிட இருப்பதால் லியோ என்று ஷார்ட் அன்ட் ஸ்வீட்டாக வைத்துள்ளதாக கூறியுள்ளார். தற்போது சென்னையில் இருக்கும் ரத்தினகுமார் மூன்று நாட்களில் காஷ்மீருக்கு படப்பிடிப்பிற்காக கிளம்பி செல்ல இருக்கிறார்.

படப்பிடிப்பிற்கு செல்ல இருக்கும் ரத்தினகுமார் லியோ படத்திற்கு மட்டுமல்ல ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் மற்றும் விக்ரம் படத்திற்கும் அவர்தான் வசனகர்த்தா. இந்த படங்களில் வசனங்கள் அதிரடி தூள் கிளப்பியதால் லியோ படத்திற்கும் அவரது வசனங்கள் பட்டையை கிளப்பும் என்று ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.

 

Previous articleஜடேஜா மற்றும் அஸ்வினை சமாளிப்பது பெரிய சவால்! ரோகித் சர்மா பேட்டி! 
Next articleஇரவு தூங்கும் போது கெண்டைக்கால் தசை இழுத்து பிடிக்கிறதா? கை கால் மரத்து போகிறதா?