உணவு சாப்பிடும் போது இந்த தவறை மட்டும் மறந்தும் செய்யாதீர்கள்!! சர்க்கரை அளவு எல்லையை தாண்டி உயர்ந்துவிடும்!!

0
151
Don't forget this mistake while eating!! Sugar level will rise beyond the limit!!
Don't forget this mistake while eating!! Sugar level will rise beyond the limit!!

உணவு சாப்பிடும் போது இந்த தவறை மட்டும் மறந்தும் செய்யாதீர்கள்!! சர்க்கரை அளவு எல்லையை தாண்டி உயர்ந்துவிடும்!!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் சர்க்கரை வியாதி என்பது வயதானவர்களுக்கு வரக் கூடிய ஒரு பாதிப்பாக இருந்தது.ஆனால் தற்பொழுது மக்களிடம் சர்க்கரை வியாதி அதிகரித்துவிட்டது.மாவு வகை உணவுகள்,சர்க்கரை நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளால் குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தபடி வேலை பார்க்கும் நிலை உள்ளதால் உடலி உழைப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.இதனால் உடல் பருமன்,சர்க்கரை வியாதி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவு முறையில் அதீத கவனம் செலுத்துவது அவசியமாகும்.சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல அனைவரும் தங்களுக்கான உணவை உரிய நேரத்தில் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.குறிப்பாக மதிய உணவை தாமதிக்காமல் உரிய நேரத்தில் எடுத்துக் கொள்வதை தொடர்ச்சியாக செய்து வர வேண்டும்.நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சரிவிகித உணவாக இருக்க வேண்டும்.
அதாவது புரதம்,நார்சத்து அதிக அளவில் இருக்க வேண்டியது அவசியமாகும்.உணவில் கார்போஹைட்ரேட்டுகள் மிதமான அளவில் இருக்க வேண்டும்.

இனிப்பு உணவுகளை முழுமையாக தவிர்த்தல் வேண்டும்.மதிய உணவை உரிய நேரத்தில் சாப்பிட வேண்டும்.உணவு உட்கொள்வதில் தாமதம் ஏற்பட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.உணவு உட்கொண்ட பின்னர் இனிப்பு நிறைந்த பானங்களை குடிப்பது சிலருக்கு விருப்பமாக இருக்கும்.ஆனால் இந்த பழக்கம் இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரையின் அளவை மளமளவென உயர்த்திவிடும்.

எனவே பொரித்த உணவுகள்,இனிப்பு உணவுகள்,மாவு சத்து உணவுகள் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.

Previous articleKANUKAL PAIN: சிகிச்சை இன்றி கணுக்கால் வலிக்கான சிறந்த வீட்டு வைத்தியம் இதோ!!
Next articleமக்களே கவனம்.. நமது உடலில் புற்றுநோய் இருந்தால் முதலில் இந்த அறிகுறிகள் தான் இருக்குமாம்!!