இந்த கோடை காலத்தில் வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்ச்சி நிறைந்த உணவுகளை வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.இயற்கையான முறையில் உடலை குளிர்ச்சியாக்க தர்பூசணி,முலாம்பழம்,வெள்ளரி போன்றவற்றை சாப்பிடலாம்.இவை அனைத்தும் அதிக நீர்சத்து நிறைந்த பழங்களாகும்.
இதில் அதிக சுவை கொண்ட முலாம் பழத்தில் வைட்டமின் ஏ,வைட்டமின் சி போன்ற ஊட்டசத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த முலாம்பழத்தை ஜூஸாக செய்து குடித்தால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.
முலாம்பழ ஊட்டச்சத்துக்கள்:
1)வைட்டமின் சி
2)வைட்டமின் ஏ
3)பொட்டாசியம்
4)நார்ச்சத்து
முலாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1.இதில் இருக்கின்ற வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.முலாம் பழத்தை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
2.முலாம்பழத்தில் இருக்கின்ற பொட்டாசியம் சத்து உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.சருமம் சம்மந்தபட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாக முலாம்பழ ஜூஸ் பருகலாம்.
3.அஜீரணப் பிரச்சனை சரியாக முலாம் பழத்தை உட்கொள்ளலாம்.முலாம் பழத்தில் இருக்கின்ற நார்ச்சத்து குடல் கழிவுகளை எளிதில் வெளியேற்றும்.
4.இதய ஆரோக்கியம் மேம்பட முலாம் பழத்தை ஜூஸாக செய்து குடிக்கலாம்.இதில் இருக்கின்ற ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
5.கர்ப்பிணி பெண்கள் முலாம் பழம் ஜூஸ் செய்து குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.உடல் சூடு தணிய தினமும் ஒரு கிளாஸ் முலாம்பழ ஜூஸ் செய்து குடிக்கலாம்.
6.தோல் சார்ந்த பிரச்சனைகள் அதாவது அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் குணமாக முலாம் பழம் ஜூஸ் செய்து குடிக்கலாம்.
7.கண் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக தினமும் ஒரு கிளாஸ் முலாம் பழம் ஜூஸ் செய்து குடிக்கலாம்.
8.சிறுநீரகம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக முலாம் பழ ஜூஸ் செய்து குடிக்கலாம்.