கோடைக்கால உடல் சூட்டை தணிக்க தண்ணீருடன் இந்த மூன்றையும் மறக்காம சேர்த்து குடியுங்கள்!!
வெயில் காலம் ஆனது தற்பொழுது நெருங்கி வரும் நிலையில் தினம் தோறும் நமது உடலை அதிகளவு தண்ணீர் குடித்து நீரோட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வைக்கும் பொழுது தான் உடல் சூடு நீர் கடுப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் காணப்படும். மேற்கொண்டு தண்ணீர் குடிப்பதனால் மட்டும் உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள முடியாது.தண்ணீருடன் சேர்த்து சில பொருட்களை குடிப்பதனால் ஒரு நாள் முழுவதும் கூட உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம்.
ரோஜா இதழ் தண்ணீர்:
நாம் தினசரி தண்ணீரில் ரோஜா இதழ்கள் சேர்த்து குடித்து வந்தால் முகப்பரு பிரச்சனை நீங்கும்.
இரவு நேரத்தில் ரோஜா இதழ்களை தண்ணீரில் ஊற வைத்து விட்டு பிறகு காலையில் அதனை குடிக்க வேண்டும்.
உடலை குளிர்ச்சியாக்குவதுடன் அதிக உடல் சூட்டால் ஏற்படும் காய்ச்சல் போன்றவற்றை வராமல் தடுக்கவும் இது உதவும்.
குங்குமப்பூ தண்ணீர்:
ரோஜா இதழ்களைப் போலவே குங்குமம் பூவையும் இரவு நேரத்தில் தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும்.பின்பு அடுத்த நாள் காலையில் இதனை குடிக்கலாம்.இவ்வாறு குடிக்கும் பொழுது உடலில் ஒரு நாளுக்கான நீரோட்டமானது இருந்து கொண்டே இருக்கும்.அது மட்டுமின்றி இது மன அழுத்தத்தை குறைத்து மனநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
வெந்தய தண்ணீர்:
வெந்தயத்தை இரவு நேரத்தில் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு காலையில் அதனை அருந்தலாம்.இவ்வாறு அருந்தி வர நீர் கடுப்பு, சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சல் போன்ற அனைத்தும் குணமாகும்.வெந்தயத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கும் பட்சத்தில் அதன் தண்ணீரை குடிக்கும் பொழுது அது முழுவதும் நமது உடலுக்கு கிடைக்கும்.அதே போல வெந்தயத்தை தினசரி எடுத்துக் கொள்வதால் வாயு பிரச்சனை உண்டாகும்.இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சிறிதளவு மட்டுமே எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.