படித்தது மறக்காமல் இருக்க.. கிளாஸ் டாப்பராக குடிக்கும் பாலில் இந்த பொடி கலந்துக்கோங்க!!

Photo of author

By Divya

படித்தது மறக்காமல் இருக்க.. கிளாஸ் டாப்பராக குடிக்கும் பாலில் இந்த பொடி கலந்துக்கோங்க!!

Divya

உங்கள் மூளை செயல்பாட்டை அதிகரிக்க,ஞாபக திறனை மேம்படுத்த வல்லாரை கீரை உள்ளிட்ட சில பொருட்களை பொடித்து பாலில் கலந்து குடிக்கலாம்.வல்லாரை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.இதை எப்படி பயன்படுத்த வேண்டுமென்ற செய்முறை விளக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)வல்லாரை கீரை பொடி – ஒரு தேக்கரண்டி
2)துளசி பொடி – ஒரு தேக்கரண்டி
3)சந்தனப் பொடி – அரை தேக்கரண்டி
4)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
5)ஓரிதழ் தாமரை பொடி – ஒரு தேக்கரண்டி
6)குங்குமப் பூ – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளுங்கள்.இவை அனைத்துக் நாட்டு மருந்து கடையில் பொடியாக கிடைக்கும்.அடுத்து இவை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு தாயரித்து வைத்துள்ள பொடியை அதில் கொட்டி நன்றாக காய்ச்ச வேண்டும்.

இந்த பாலை கிளாஸிற்கு வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.இந்த பாலை தினமும் பருகி வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

படிக்கும் பிள்ளைகளுக்கு இந்த பாலை தினமும் செய்து கொடுத்தால் அவர்களின் நினைவாற்றல் பல மடங்கு அதிகரிக்கும்.