அரசியலில் இறங்க வேண்டாம்!  ரஜினியை பற்றி சீமான் அளித்துள்ள காரசாரமான பேட்டி!

Photo of author

By Parthipan K

சென்னை அம்பத்தூரில் TTP காலனி பகுதியிலுள்ள சதா குள கரையில் 10 லட்சம் பனை மரங்களை நடும் நிகழ்ச்சியை தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  ஏற்பாடு செய்திருந்தார்.

சிறப்பாக நடைபெற்ற பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் “ ஒரு மனிதனுக்கு 422 மரங்கள் அவசியம். 1.5 கோடி தொண்டர்களை கொண்டிருக்கும் கட்சி ஏன் மரத்தை நட முயற்சி செய்யவில்லை. ராமன் கோயிலுக்கு கல்லெடுத்து வர சொன்ன பிரதமர் மரம் நட ஏன் சொல்லித் தரவில்லை.

அதேபோல் நடிகர் ரஜினி என்றைக்கு வேறு ஒருவரை முதல்வராக அறிவிப்பேன் என்றார் அன்றைக்கே அவர் மீது இருந்த முரண்பாடு நீங்கியது.

மேலும் நடிகர் ரஜினிக்கு நான் ஒரு வேண்டுதல் வைக்கிறேன். அரசியலில் இறங்க வேண்டாம். ஏனெனில் புகழ்ச்சி மட்டுமே பார்க்கக்கூடிய உங்களுக்கு இது அவசியம் அல்ல.

நன்றாக புத்தகம் படித்து.. இமயமலைக்கு சென்று.. பேரன் பேத்திகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்” என்று காரசாரமாக  பேட்டி அளித்துள்ளார் சீமான்.