திருமணம் குறித்து கிசுகிசு பரப்பாதீர்கள்!!! நடிகர் விஷால் அவர்கள் பேட்டி!!!

0
263
#image_title

திருமணம் குறித்து கிசுகிசு பரப்பாதீர்கள்!!! நடிகர் விஷால் அவர்கள் பேட்டி!!!

என்னுடைய திருமணம் குறித்து கிசுகிசுப்புகளை பரப்ப வேண்டாம் என்று நடிகர் விஷால் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இயக்குநர் ஆதிக்கம் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே சூரியா, சுனில், காது வர்மா, அபிநயா ஆகியோரது நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி வெளியாகியது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் எஸ்டேட் சூரியா அவர்களின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஷால் அவர்கள் திருமணம் குறித்து எந்த செய்தியையும் பரப்பக்கூடாது என்று கேட்டுள்ளார்.

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஷால் “மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றி எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. நான் இனிமேல் தொடர்ந்து இது போலீஸ் பல நல்ல திரைப்படங்களில் நடிப்பேன்.

தற்பொழுது படத்தை எடுத்து ரிலீஸ் செய்வது தான் கஷ்டமாக உள்ளது. குறைந்த அளவு முதலீடு செய்து எடுக்கப்பட்ட 125 திரைப்படங்கள் திரைக்கு வர முடியாமல் முடங்கி உள்ளது. இதனால் 1 கோடி ரூபாய் முதல் 4 கோடி ரூபாய் வரை படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாரும் இருக்கக் கூடாது.

குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ள நபர்கள் அந்த பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். அல்லது நிலம் வாங்கி போடலாம். படம் எடுக்கிறேன் என்ற பெயரில் பணத்தை தேவையில்லாமல் இழந்து விடாதீர்கள்.

தற்பொழுதைய காலத்தில் பெண் இயக்குநர்கள் சாதிக்க தொடங்கிய விட்டனர். பெண் இயக்குநர் அல்லது ஆண் இயக்குநர் யாராக இருந்தாலும் நல்ல கதையோடு வந்தால் அவர்களின் திரைப்படங்களில் நான் நடிப்பேன்.

என்னுடைய திருமணம் குறித்தான கிசுகிசுக்களை தயவு செய்து பரப்பாதீர்கள். எனக்கு கண்டிப்பாக திருமணம் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும். திருமணம் முடிவானதும் நானே அறிவிக்கின்றேன்” என்று கூறினார்.

 

Previous articleவிநாயகர் கையில் இருந்த 11 கிலோ லட்டு திருட்டு போனதால் பக்தர்கள் அதிர்ச்சி!!! இனி எப்படி ஏலம் விடுவது!!?
Next articleகர்நாடகாவில் நுழைய கூடாது.. காவிரி விவகாரம் குறித்து ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும் – பகிரங்க மிரட்டல் விடுத்த வாட்டாள் நாகராஜ்!!