விநாயகர் கையில் இருந்த 11 கிலோ லட்டு திருட்டு போனதால் பக்தர்கள் அதிர்ச்சி!!! இனி எப்படி ஏலம் விடுவது!!?

0
74
#image_title

விநாயகர் கையில் இருந்த 11 கிலோ லட்டு திருட்டு போனதால் பக்தர்கள் அதிர்ச்சி!!! இனி எப்படி ஏலம் விடுவது!!?

ஏலம் விடுவதற்காக விநாயகர் கையில் வைக்கப்பட்டிருந்த 11 காலை லட்டு திருட்டு போனதால் பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இனி எப்படி ஏலம் விடுவது என்ற கவலையில் பக்தர்கள் உள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி தினவிழா கடந்த செப்டம்பர் 18ம் தேதி நாடு முழுவதும் விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதற்காக பொது இடங்களில் பக்தர்கள் ஒன்றாக கூடி பெரிய வடிவிலான சிலைகளை வைத்து பூஜை செய்து விநாயகரை வழிபட்டு வந்தனர். மக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.

ஒவ்வொரு வருடமும் தெலுங்கானா மாநிலம் மியாபூரில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அதிக எடையுள்ள பெரிய லட்டு படைக்கப்பட்டு பின்னர் ஏலம் விடப்படுகின்றது. பின்னர் இந்த லட்டு ஏலம் விடப்படும். ஏலம் விடப்படும் இந்த லட்டை பல ஆயிரம் ரூபாய்க்கு போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுப்பார்கள்.

இந்நிலையில் வழக்கம் போல மியாபூரில் பிரம்மாண்ட சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலையின் கையில் 11 காலை எடை கொண்ட லட்டு வைக்கப்பட்டது. 7 நாட்கள் கழிந்து விசர்ஜனம் நேரத்தில் ஏலம் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று(செப்டம்பர்22) பக்தர்கள் விநாயகர் சிலை அருகே சென்றனர். அப்பொழுது விநாயகர் சிலையின் கையில் இராட்சத லட்டு இல்லாததை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து முதலில் சிலை அருகே வைத்திருந்த சிசிடிவி கேமராவை பார்த்த பொழுது வாலிபர் ஒருவர் விநாயகர் சிலை அருகே வந்து லட்டை திருடிச் சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. வாலிபர் அந்த லட்டை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.