கர்நாடகாவில் நுழைய கூடாது.. காவிரி விவகாரம் குறித்து ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும் – பகிரங்க மிரட்டல் விடுத்த வாட்டாள் நாகராஜ்!!

0
40
#image_title

கர்நாடகாவில் நுழைய கூடாது.. காவிரி விவகாரம் குறித்து ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும் – பகிரங்க மிரட்டல் விடுத்த வாட்டாள் நாகராஜ்!!

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக இடையே தொடர்ந்து பிரச்சனைகள் வலுத்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீரை பெறுவது என்பது தமிழகத்திற்கு பெரும் போராட்டமாகவே இருக்கிறது.அதேபோல் இந்த ஆண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் உரிய தண்ணீர் திறந்து விடாமல் இழுத்தடித்து வந்த கர்நாடக அரசின் செயலை கண்டித்து கடந்த 18 ஆம் தேதிக்குள் தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.அதன்படி காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதற்கு கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் கன்னட திரைப் பிரபலங்கள் சிலர் காவிரி நீர் விவகாரம் குறித்து 2 மாநிலங்களும் பேசி சுமுக முடிவை எடுக்க வேண்டுமென்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பின் போது கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு பகிரங்க மிரட்டல் ஒன்றை விடுத்திருக்கிறார்.வாட்டாள் நாகராஜ் தொடர்ந்து தமிழகத்தை எதிர்த்து வருகிறார்.கர்நாடக வாழ் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் பொறுப்பற்று பேசி வரும் அவர் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது.கர்நாடகாவில் தமிழ் படங்கள் திரையிடுவதற்கு தடை விதிக்கப்படும்.

இங்கு வாழும் தமிழர்கள் காவிரி தண்ணீரை குடிக்க வேண்டுமென்றால் தமிழகம் தண்ணீர் கேட்க கூடாது.வேண்டுமென்றால் கர்நாடகாவில் வாழும் தமிழ் மக்களை ரயில்,பஸ் மூலம் உங்கள் மாநிலத்திற்கு அழைத்து கொண்டு செல்லுங்கள் என்று சர்ச்சை கருத்துக்களை கூறினார்.இதனை தொடர்ந்து பேசிய அவர் காவிரி விவகாரம் குறித்து ரஜினிகாந்த் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும்.ஒருவேளை ரஜினி காவிரி விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க வில்லை என்றால் அவர் கர்நாடக மாநிலத்தில் கால் எடுத்து வைக்க முடியாது என்று பகிரங்க மிரட்டல் விடுத்தது இருக்கிறார்.

இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து கன்னட திரைப்பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தமிழ் திரைப்பிரபலங்கள் காவிரி நீருக்காக குரல் கொடுக்காமல் இருப்பது ரசிகர்களை கோபத்தில் ஆழத்தி இருக்கிறது.