எனது நண்பருக்கு விசா வழங்க கூடாது! கோர்ட்டில் மனு அளித்த பெண்!

Photo of author

By Parthipan K

எனது நண்பருக்கு விசா வழங்க கூடாது! கோர்ட்டில் மனு அளித்த பெண்!

Parthipan K

Don't issue visa to my friend! The woman who petitioned the court!

எனது நண்பருக்கு விசா வழங்க கூடாது! கோர்ட்டில் மனு அளித்த பெண்!

டெல்லி கோர்ட்டில்  கேரளா மாநிலத்தை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அந்த பெண் கூறியிருப்பது டெல்லியை சேர்ந்த எனது ஆண் நண்பர்  ஒருவருக்கு  மர்ம நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நோய் பாதிப்பினால் அவருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு அவர் படுத்த படுக்கையாக உள்ளார் எனவும் கூறப்பட்டிருந்தது.

மேலும் எனது நண்பரின் வேலையை கூட அவரால் செய்து கொள்ள முடியாத நிலையில் அவதிப்பட்டு வருகிறார் எனவும்  கூறியிருந்தார். இவருக்கு  2014 ஆம் ஆண்டில்லிருந்து இந்த  நோயால் போராடி வருகிறார். இந்நிலையில் எனது நண்பர் இந்த நோயால் அதிக மன வேதனையில் இருப்பதால் அவர் ஐரோப்பிய நாட்டிற்குச் சென்று அங்கு கருணை கொலை செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இதற்காக அவர் சிகிச்சைக்கு செல்வதாக கூறி விசா விண்ணப்பித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுயிருந்தார். இவர் எடுத்துள்ள முடிவினால்  எனது நண்பரின் குடும்பத்தினர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி விடுவார்கள் எனவும் கூறியிருந்தார். அவருக்கு விசா வழங்க கூடாது எனவும்  அவரது உடலை முழுமையாக பரிசோதனை செய்து அதற்கு தக்க சிகிச்சை அளிக்க வேண்டும் என மத்திய அரசு ஒரு மருத்துவ குழுவை நியமிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் ஆண் நண்பருக்காக பெண் ஒருவர் இவ்வாறு மனுவில்  கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.