துடைப்பத்தை இப்படி வைத்தால் கட்டாயம் சண்டை வரும்!

Photo of author

By Kowsalya

துடைப்பத்தை இப்படி வைத்தால் கட்டாயம் சண்டை வரும்!

வீட்டில் துடைப்பத்தை இப்படி வைத்தால் கட்டாயமாக சண்டை வரும். மகா லட்சுமி வாசம் செய்யும் இடம் என்பதால் துடைப்பத்தை தானமாக யாருக்கும் கொடுக்க கூடாது.

துடைப்பத்தை ஈசானி மூலையில் வைக்க கூடாது. துடைப்பத்தை தேய தேய வைத்துப் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தி கூட்டினால் வறுமையானது வந்து சேரும்.

துடைப்பத்தை வைப்பதற்கு பலவேறு முறை உள்ளது. பல பேர்களுக்கு இதை எப்படி? எங்கு வைக்க வேண்டும்? என்பதே தெரிவதில்லை.

ஒரு சிலர் வீட்டில் துடைப்பத்தை படுக்க வைப்பார்கள். அப்படி படுக்க வைத்தால் குடும்பம் படுத்து விடும் என சாஸ்திரம் சொல்லுகிறது.

பழைய காலத்தில் வீட்டிலேயே பாட்டிகள் துடைப்பத்தை செய்வார்கள். இன்று 200 முதல் 300 வரை கொடுத்து அந்த துடைப்பத்தை வாங்குகிறார்கள்.

அப்படி வாங்கி நீங்கள் கதவுக்குப் பின்னால் தொங்க விடுவது அல்லது படுக்க வைப்பதோ கண்டிப்பாக கூடாது.

அதேபோல் துடைப்பத்தின் நுனிப்பகுதி வான்நோக்கி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது முக்கியமான ஒன்று.

ஒரு சிலர் வீட்டில் ஆணி அடித்து துடைப்பத்தை மாட்டுவார்கள். பலரும் கேட்கும் கேள்விகள் துடைப்பத்தை ஆணியில் மாட்டலாமா? என்று தான்.மாட்டலாம், ஆனால் கதவுக்கு பின்னால் மட்டும் மாட்டக் கூடாது.

ஒரு சிலர் நினைப்பார்கள் துடைப்பத்தை எல்லோரும் பார்க்கும்படி எப்படி ஆணியில் மாட்டுவது என்று, அதனால் கதவுக்கு பின்னாலேயே ஆணியடித்து மாட்டுவார்கள் அது மிக மிகத் தவறு.

ஒரு சிலர் வீட்டில் இரண்டு துடைப்பம் வைத்திருப்பார்கள். இரண்டையும் ஒரே இடத்தில் வைத்து இருப்பார்கள். அப்படி வைக்கக்கூடாது. நமது முன்னோர்கள் கூட சொல்லியிருப்பார்கள் 2 துடைப்பம் வைத்திருக்கிறீர்கள், பிரித்து வையுங்கள் என்று.

அப்படி 2 துடைப்பத்தை ஒன்றாக வைத்திருந்தீர்கள் என்றால் அன்றைக்கு கணவன் மனைவிக்கிடையே அல்லது உறவினர்களுடனோ அல்லது பக்கத்து வீட்டார்களுக்கிடையோ கண்டிப்பாக சண்டை வரும்.

அப்படி துடைப்பத்தை வைக்கும் முறையை சரியாக பயன்படுத்தி வந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் வீட்டில் பெருகும்.