மிஸ் பண்ணிடாதீங்க.. புற்றுநோய்க்கு நம் வீட்டு சமையலறையில் மருந்து இருக்கு!!

Photo of author

By Divya

மிஸ் பண்ணிடாதீங்க.. புற்றுநோய்க்கு நம் வீட்டு சமையலறையில் மருந்து இருக்கு!!

Divya

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்றுவரை சிலவகை உணவுப் பழக்க வழக்கங்கள் தொடர்ந்து வருகிறது.நம் அனைவரது வீட்டிலும் முந்தின நாள் மிஞ்சி போன வெள்ளை சாதத்திற்கு தண்ணீர் ஊற்றி மறுநாள் பழைய சாதமான சாப்பிடும் பழக்கம் இருக்கிறது.

சிலர் இந்த பழைய சாதத்தில் தயிர்,வெங்காயம் சேர்த்து சாப்பிடுவார்கள்.சிலர் கருவாட்டு தொக்கு கொண்டு சாப்பிடுவார்கள்.எப்படி சாப்பிட்டாலும் பழைய சாதத்தின் ஆரோக்கிய பலன்கள் நமக்கு முழுமையாக கிடைத்துவிடும்.

பழைய சாதத்தில் புரோபயாட்டிக் என்ற பாக்டீரியா நிறைந்து காணப்படுகிறது.இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு ஆரோக்கிய உணவாகும்.செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஒரு கப் பழைய சாதம் சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சர்க்கரை நோயாளிகள் பழைய சாதம் சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.அதேபோல் தினமும் பழைய சாதம் சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் உடலில் உருவாகாமல் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பழைய சாதத்தில் நார்ச்சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் பழைய சாதம் சாப்பிட்டால் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.

பழைய சாதம் உடலுக்கு புத்துணர்வை வழங்குகிறது.தினமும் பழைய சாதம் சாப்பிட்டால் அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகும்.வாய்ப்புண்,வயிற்றுப்புண் பிரச்சனை இருப்பவர்கள் பழைய சாதம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

வயிறு எரிச்சல் இருப்பவர்கள் காலை நேரத்தில் பழைய சாதம் உட்கொள்ளலாம்.பழைய சாதத்தில் இருக்கின்ற நல்ல பாக்டீரியா செரிமான மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் பழைய சாதம் சாப்பிடலாம்.