குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காயை இந்த பொருட்களுடன் தப்பி தவறியும் சாப்பிட்டுவிடாதீர்!!

Photo of author

By Divya

குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காயை இந்த பொருட்களுடன் தப்பி தவறியும் சாப்பிட்டுவிடாதீர்!!

Divya

கோடை காலத்தில் நாம் சாப்பிட வேண்டிய நீர்ச்சத்து நிறைந்த காய்களில் ஒன்றாக வெள்ளரிக்காய் உடலுக்கு அதிக குளிர்ச்சி தரக் கூடியவை ஆகும்.கோடை காலத்தில் மக்கள் ஆதிக்கம் விரும்பி சாப்பிடும் காயாக இது உள்ளது.

இந்த வெள்ளரிக்காய் உடல் தசைகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.வயிறு தொடர்பான பாதிப்புகளை சரி செய்யும் மருந்தாக வெள்ளரி உள்ளது.வெள்ளரிக்காய் பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டிருக்கிறது என்றாலும் இதை சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் நமது ஆரோக்கியத்திற்கு தீங்காக மாறிவிடும்.

அப்படி வெள்ளரிக்காயுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத மூன்று உணவுகள் என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

1)தயிர்

குளிர்ச்சி நிறைந்த புரோபயாடிக் உணவுகளில் ஒன்று தயிர்.இவற்றுடன் வெள்ளரிக்காய் சேர்த்து சாப்பிட்டால் சைனஸ் பிரச்சனை ஏற்படலாம்.தயிர் மற்றும் வெள்ளரி ஆகிய இரண்டும் குளிர்ச்சி நிறைந்த பொருள் என்பதால் இவற்றை சேர்த்து சாப்பிட்டால் சளி பிரச்சனை வரக் கூடும்.

2)தக்காளி

தயிருடன் தக்காளி சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.தயிர் மற்றும் தக்காளி ஆகிய இரண்டும் செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும்.

இந்த இரண்டு உணவுப் பொருட்களையும் சேர்த்து சாப்பிட்டால் உடலில் pH மதிப்பு பாதிக்கப்பட்டுவிடும்.தக்காளி மற்றும் வெள்ளரி ஆகிய இரண்டையும் சாலட்டியில் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை பலர் கொண்டிருக்கின்றனர்.இனி இந்த தவறை செய்யாமல் இருப்பது நல்லது.

3)முள்ளங்கி

வெள்ளரிக்காய் மற்றும் முள்ளங்கி ஆகிய இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இரத்த ஓட்டம் தடைப்பட்டுவிடும்.முள்ளங்கி மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.