ஏப்ரல் 5 ஆம் தேதி ஆகிய நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மின்சாரம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாக மின்சார வாரியம் அறிவித்திருக்கிறது.
இது குறித்து மின்சார வாரியம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
பொதுமக்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய மின்சாரம் சார்ந்த பிரச்சனைகளான தேவையற்ற மின்கம்பங்களை, புதிய மின்கம்பங்களுக்கான தேவைகள், மின் மோட்டார்களில் உள்ள பிரச்சனைகள், புகார்கள் மற்றும் குறைந்த மின்னழுத்தம் போன்றவற்றிற்கான தேவைகளை இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறது.
அதன்படி நாளை தமிழகம் முழுவதும் நடைபெறக்கூடிய மின்சார வாரியத்தின் சிறப்பு முகாம்களில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின்மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றுதல் போன்ற தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் அந்த புகார்களுக்கு உடனடியாக தீர்வுகள் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே பொதுமக்கள் மற்றும் மென் நுகர்வோர் தவறாமல் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தங்களுடைய புகார்களையும் குறைகளையும் தீர்த்துக் கொள்ளும்படி மின்சார வாரியம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, ஏப்ரல் ஐந்தாம் தேதி யான நாளை சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.