தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க இந்த உணவுகளை மிஸ் பண்ணாமல் எடுத்துக் கொள்ளுங்கள்!
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஒரு சத்துமிக்க ஆகாரமாக திகழ்கிறது.இந்த தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க வைட்டமின்கள்,புரோட்டீன்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தாய்மார்கள் சாப்பிட வேண்டியது அவசியமாகும்.
பெண்கள் கருவுற்ற காலத்தில் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் மேம்பட சத்தான உணவுகளை அதிகளவு உண்கிறார்கள்.இதனால் தாய்க்கும்,குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடுகிறது.ஆனால் குழந்தை பிறந்த பிறகு குழந்தையின் மீது முழு கவனமும் சென்று விடுவதால் தங்களை கவனித்துக் கொள்ள பெண்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.குறிப்பாக தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் ஊட்டசத்துக்கள் அடங்கிய உணவுகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே குழந்தைக்கு தேவையான சத்துக்கள் தாய்ப்பால் மூலம் சென்று சேரும்.
அந்தவகையில் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் உணவுகள் என்னென்ன என்பது குறித்து இங்கு தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் தங்களது உணவில் 600 கலோரிகள் வரை இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.கூடுதல் கலோரிகள் தாய்ப்பாலை அதிகளவில் சுரக்க செய்கிறது.
தினமும் நட்ஸ் மற்றும் சீட்ஸ் வகைகளை சாப்பிட வேண்டும்.அதேபோல் டயட்டிற்கு உகந்த உணவுகளான ஓட்ஸ் மற்றும் பார்லியில் இரும்புச்சத்து,நார்ச்சத்து,கார்போஹைட்ரேட் இருப்பதினால் இதுபோன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
இயற்கையாக தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க வெந்தயம் பெரிதும் உதவுகிறது.வெந்தயத்தை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வரும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.வெள்ளை பூண்டை பாலில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.