இன்று 17/9/2020 மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வது எப்படி? முக்கியமான இந்த நாளை தவறவிடாதீர்கள்!

0
117

17/9/2020 மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வது எப்படி? முக்கியமான இந்த நாளை தவறவிடாதீர்கள்!

அமாவாசை என்பது பித்ருக்களுக்கு உரிய நாளாக சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக நாளை வரும் புரட்டாசி மகாளய அமாவாசை மிகவும் சிறப்பான பலன்களை நமக்கு தரக்கூடியதாக இருக்கிறது. பித்ருக்களை வழிபடுவதற்கு மகாலயபட்சம் இருப்பதால் நாளை முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து வழிபட்டால் வாழ்வில் சகல யோகங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை..

யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்? யாருக்காக கொடுக்க வேண்டும்?

வழிவழியாக நம் வம்சத்தில் இறந்தவர்களை தான் முன்னோர்கள் என்று அழைக்கிறோம். அது எந்த உறவாக இருந்தாலும் சரி. நம் குடும்பத்திற்கு ரத்த பந்தம் உள்ள உறவுகள் தான் ஆத்மாக்களாக இருந்தாலும் நமக்கு நன்மைகளை செய்ய முடியும். அத்தகையவர்களை வழிபடும் ஒரு சிறந்த நாளாக நாளைய நாள் அமைந்துள்ளது.கணவனை இழந்த பெண்கள் கணவனுக்காக தர்ப்பணம் கொடுக்கலாம். இதைத் தவிர பெண்கள் எந்த காரணத்துக்காகவும், யாருக்காகவும் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுக்கக் கூடாது என்பது ஆகம விதி.

ஆண்கள் தங்களின் முன்னோர்களுக்காக காலை முதல் ஒரு வேளை மட்டும் உபவாசம் இருந்து அவர்களுக்கு பிடித்த அத்தனை உணவு வகைகளையும் தயார் செய்து படையல் போட்டு, வீட்டில் ஒரு தாம்பூலத்தட்டு வைத்து எள்ளும், தண்ணீரும் இறைத்து யாருடைய காலிலும் படாதவாறு ஊற்றி விட வேண்டும். இதை முறையாக அந்தணரை அழைத்ததும் செய்யலாம். முடியாதவர்கள் இப்படி வீட்டிலேயே சாதாரணமாக எளிமையான முறையில் செய்து கொள்ளலாம்.

முறையாக முன்னோர்களை வணங்காமல் இருந்தாலும் இந்த நாளில் நீங்கள் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் உங்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நியதி..

Previous article‘தடைசெய்யப்பட்ட மிகவும் சத்தான அரிசி’
Next articleகொடுத்து வச்ச பூனை போலும்:! பூனைக்கு வளைகாப்பு நடத்திய உரிமையாளர்!