இந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள்! தேனி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து முக்கிய தகவல்!

Photo of author

By Rupa

இந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள்! தேனி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து முக்கிய தகவல்!
தேனி மாவட்ட நிர்வாகம்.,தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார
இயக்கம் (மகளிர் திட்டம்)- சார்பில் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் வளர்ப்பு
பயிற்சி திட்டத்தின்கீழ் இளைஞர் திறன் திருவிழா 23.07.2022 (சனிக்கிழமை) அன்று
உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌவுதியா கல்லூாயில் நடைபெறவுள்ளது.
இளைஞர்களின் திறனை மேம்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பினை
உருவாக்கிதருவதே தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின்
முக்கிய நோக்கமாகும்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து சுமார் 120க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த திறன் பயிற்சி நிறுவனங்கள் மூலம்,வேலைவாய்ப்பை தர உள்ளனர்.
1. 18 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருப்பவர்கள் பயிற்சியில் சேரலாம்.
2. நலிவுற்றோர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு
45 ஆகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஆண், பெண் இருபாலரும்
இத்திறன் பயிற்சியில் சேரலாம்.
3. எட்டாம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும்
இத்திறன் பயிற்சிக்கு தகுதியானவர்கள்.
4. பயிற்சிக்கான பாடப்புத்தகங்கள், சீருடை, உணவு, தங்கும் இடம் மற்றும்
போக்குவரத்து இலவசமாக வழங்கப்படும்.
5. இப்பயிற்சிக்கான காலம் 3 முதல் 6 மாத காலம் ஆகும்.
6. பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு மாநில மற்றும் மத்திய
அரசின் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
7. இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்புள்ள தொழில்களை பற்றி அறிந்து
கொள்வதோடு திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் தகவல்களை
ஒருங்கே பெறுவதற்கு இந்த திறன் திருவிழா பேருதவியாக அமையும்.
எனவே, வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர்கள் அனைவரும் வரும்
23.07.2022 (சனிக்கிழமை) அன்று உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர்
ஹௌவுதியா கல்லூாயில் நடைபெறவுள்ள இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து
கொண்டு பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன்,
இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.