மக்களுக்கு இலவச பொருள் இனி இல்லை? உச்சநீதி மன்றத்தின் அதிரடி உத்தரவு!

Photo of author

By Parthipan K

மக்களுக்கு இலவச பொருள் இனி இல்லை? உச்சநீதி மன்றத்தின் அதிரடி உத்தரவு!

பொதுவாகதேர்தலின் பொது அனைத்து கட்சியினரும் அவரவர்களின் திறமைகேர்பே வாக்குறுதி அளிப்பார்கள் பிறகு அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதனை நிறைவேற்றுவர்கள்.அந்த வகையில்  நடப்பு ஆண்டின் முதலில் நடதப்பட்ட பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய தலைமையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தோ்தலின் போது இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் மாநில அரசுகள் நிதி நிலையை ஆராயாமல், இலவசங்களை விநியோகிக்கும் முறையை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். மேலும் முன்னதாக மாநில அரசுகளின் கடன் நிலுவையில் உள்ள போதிலும், இலவசங்களை விநியோகிக்க அவை கூடுதலாக கடன் பெறுகின்றனர் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடன் மதிப்பீட்டு முறையை ஏற்படுத்துவது அவசியம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுயிருந்தது. மேலும் அந்த மனு மீதான விசாரணை நேற்று காலை உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அதில் இலவசங்களும் சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளர். மேலும், இலவச வாக்குறுதிகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையை மறுத்த உச்ச நீதிமன்றம் இந்தியா போன்ற நாட்டில் இலவசங்களைக் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது எனவும் கூறியுள்ளது.

மேலும் இதைக் கொடுங்கள் இதைக் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட்டால் இந்தியா போன்ற நாட்டில் அதை செயல்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளது. மேலும் இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்றும் அதனால் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்பதால் அதனை உச்ச நீதிமன்றம் செய்யாது என தெரிவித்தனர். மேலும் பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில், மக்கள் நலத்திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மக்கள் நலத்திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் வேறுபாடு உள்ளது. மேலும் இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை உச்சநீதி மன்றம் இம்மாதம் 17-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.