நமது உடலுக்கு நன்மைகள் தரும் புரோபயாட்டிக் உணவுகளில் ஒன்று தயிர்.இதில் இருக்கின்ற லாக்டிக் அமிலம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.தயிர் சாப்பிட்டால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.தயிரை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.
உடல் சூட்டை தனித்து ஆரோக்கியமாக இருக்க தயிரை உட்கொள்ளலாம்.தயிர் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை நீங்கும்.தயிர் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தயிரில் நிறைந்திருக்கின்ற கால்சியம் சத்து எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
தயிர் சாப்பிட்டால் இரத்த அழுத்த பாதிப்பு கட்டுப்படும்.தயிர் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தயிரை உட்கொள்ளலாம்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக தயிரை சாப்பிடலாம்.
தோலில் தயிரை பூசினால் இயற்கை ஈரப்பதம் மற்றும் பொலிவு கிடைக்கும்.தயிர் உட்கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.பெண்கள் சந்திக்கும் பிறப்புறுப்பு தொற்று குணமாக தயிரை உட்கொள்ளலாம்.வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தீர தயிர் சாப்பிடலாம்.
வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு உடனடி தீர்வாக தயிர் இருக்கிறது.உடல் கொழுப்பை எரிக்க தயிர் உட்கொள்ளலாம்.கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.தயிரில் வைட்டமின் பி 12,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த தயிரை சாப்பிட்டால் உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
இவ்வளவு நன்மைகள் நிறைந்த தயிரை நாம் பித்தளை,செம்பு,அலுமியம் போன்ற பாத்திரங்களில் வைத்தால் அவை உடலுக்கு பாதமாகிவிடும்.இந்த உலோகங்கள் அமிலம் மற்றும் வேதியியல் ரீதியான பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.
தயிரை செம்பு,பித்தளை பாத்திரங்களில் வைத்து சாப்பிடுவதால் உடல் சந்திக்கும் பக்கவிளைவுகள்:
1)வயிற்று வலி
2)வாந்தி
3)குமட்டல்
4)வயிற்றுப்போக்கு
5)தலைச்சுற்றல்
இதுபோன்ற வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும்.எனவே இனி தயிரை மண் பாத்திரம்,எவர் சில்வர் பாத்திரத்தில் வைத்து பயன்படுத்துங்கள்.