ஆர்சிபி என்று சொல்லாதீர்கள் இந்தியா என்று சொல்லுங்கள்! இந்திய வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்! 

Photo of author

By Amutha

ஆர்சிபி என்று சொல்லாதீர்கள் இந்தியா என்று சொல்லுங்கள்! இந்திய வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்! 

ஆர்சிபி, ஆர்சிபி என கூச்சலிட்ட ரசிகர்களை நோக்கி இந்தியா என கூறுமாறு இந்திய கிரிக்கெட் வீரர் கூறியுள்ளது பாராட்டுதலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதேபோல் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 2- வது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பில்டிங் செய்து கொண்டிருந்தபோது விக்கெட் கீப்பராக இருந்த விராட் கோலியை பார்த்து ரசிகர்கள் ஆர்சிபி!, ஆர்சிபி! என்று கூச்சலிட்டனர்.

அவர்களை நோக்கி அதட்டிய விராட் கோலி தனது இந்திய அணியின் ஜெர்சியை சுட்டிக்காட்டினார். அதன்பின்பு ரசிகர்கள் இந்தியா! இந்தியா! என்று குரல் எழுப்பினர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. விராட் கோலியின் செயலை பல்வேறு நபர்களும் பாராட்டியதோடு வீடியோவை பகிர்ந்துள்ளனர். முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் வருகின்ற மார்ச் 1-ஆம் தேதி நடக்க இருக்கிறது.