அந்த மாதிரி விஷயங்களை கூகுளில் தேடினால் அவ்வளவு தான்!! எச்சரிக்கும் கூகுள் நிறுவனம்!!

Photo of author

By Jayachithra

அந்த மாதிரி விஷயங்களை கூகுளில் தேடினால் அவ்வளவு தான்!! எச்சரிக்கும் கூகுள் நிறுவனம்!!

Jayachithra

Updated on:

நாம் பெரும்பாலும் ஆன்லைன் தேவைகளுக்கு கூகிளை மட்டுமே சார்ந்துள்ளோம். ஆனால் அதில் இருக்கும் வலை தளங்கள் மற்றும் செயலிகள் அனைத்தும் கூகிளில் உருவாக்கப்பட்டது அல்ல.
கீழ்காணும் உபயோகத்திற்கு கூகிளை பயன் படுத்தாதீர்கள்.

இணைய வங்கி:

நெட் பேங்கிங் எனும் ஆன்லைன் வங்கியின் மூலம் உங்கள் பரிவர்த்தனைக்காக கூகுளை பயன்படுத்த வேண்டாம். உங்கள் வங்கியின் தளத்தை போன்றே பல்வேறு போலியான வலைதளங்கள் உள்ளன. இதன் மூலம் உங்கள் விவரங்கள் திருட படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆன்லைன் மருந்துகள்: கூகிளில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளையோ அல்லது நோயின் அறிகுறிகளையோ ஒரு போதும் தேட வேண்டாம்.
மேலும், உங்களுக்கு தேவையான மருந்துகளை அருகில் உள்ள மருத்துவரின் பரிந்துரையில் பெற்று கொள்வதே சிறந்ததாகும். இதனால் உங்கள் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.எனவே உங்கள் நோய்க்கான மருந்தை தேடவும், கூகுளை பயன்படுத்தாதீர்கள்.

வாடிக்கையாளர் சேவை மைய எண்கள்:

உங்களுக்கு தேவையான நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் கம்பனிகளின் வாடிக்கையாளர் உதவி மைய எண்ணை கூகிளில் தேடாதீர்கள். அதில் பல போலியானவைகளாக இருக்கலாம். இதனால், உங்கள் தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் நிறைய உள்ளது.

சமூக வலைத்தள உள்நுழைவு: உங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் உள்நுழைய உங்கள் கைபேசியில் இருக்கும் செயலியை மட்டுமே பயன்படுத்துங்கள். கூகுள் மூலம் லாகின் செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தரவுகள் திருடப்படும். இது மேலும் ஃபிஷிங் செய்ய வழிவகுக்கும்.

ஆண்டி வைரஸ்: உங்கள் கணினி அல்லது கைபேசியின் பாதுகாப்பிற்காக ஆண்டி வைரஸ் பயன்படுத்துகிறோம். பல ஆன்டி வைரஸ்கள் நமக்கு இலவசமாக கிடைக்கின்றன. இதனால் ஹேக் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே கூகுகளை மேற்கண்ட காரணங்களுக்கு பயன்படுத்தாதீர்கள்.