குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தீராத தொல்லையாக இருப்பது சளி,இருமல் தான்.இதற்கு சிறந்த பாட்டி வைத்தியமான கார சாரமான நண்டு ரசம் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
1)நாட்டு நண்டு – 10
2)சீரகம் – ஒரு ஸ்பூன்
3)மிளகு – ஒரு ஸ்பூன்
4)பூண்டு – 10 பல்
5)வர மிளகாய் – இரண்டு
6)மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
7)தக்காளி – ஒன்று
8)உப்பு – தேவையான அளவு
9)எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
10)கடுகு – ஒரு ஸ்பூன்
11)கறிவேப்பிலை – ஒரு கொத்து
12)கொத்தமல்லி தழை – சிறிதளவு
முதலில் நாட்டு நண்டு தேவையான அளவு வாங்கிக் கொள்ளுங்கள்.பிறகு நண்டை சுத்தம் செய்து உரலில் போட்டு நன்றாக இடித்து பேஸ்டாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.
அடுத்து 10 பல் வெள்ளைப்பூண்டு,ஒரு ஸ்பூன் மிளகு,ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் இரண்டு வர மிளகாயை வாணலியில் போட்டு சிறிது எண்ணெய் விட்டு வறுக்க வேண்டும்.தேவைப்பட்டால் அரை ஸ்பூன் கொத்தமல்லி விதை சேர்க்கலாம்.
பிறகு ஒரு பெரிய சைஸ் தக்காளி பழத்தை அதில் போட்டு நன்கு வதக்கி ஆற விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விழுதை அரைத்த நண்டு பேஸ்ட்டில் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
பிறகு அதில் கடுகு,கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடுங்கள்.அடுத்ததாக அரைத்து வைத்துள்ள நண்டு கலவையை அதில் ஊற்றி 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள்.
நண்டு ரசம் நன்கு கொதித்து வந்ததும் சிறிது மல்லித்தழை தூவி இறக்கி சூடாக குடித்தால் சளி,இருமல் பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைக்கும். *