மாவிலை தான் என்று சாதாரணமாக நினைக்காதீர்கள்!! இவை நம் முன்னோர்கள் பயன்படுத்திய அருமருந்தாம்!!

Photo of author

By Divya

மாவிலை தான் என்று சாதாரணமாக நினைக்காதீர்கள்!! இவை நம் முன்னோர்கள் பயன்படுத்திய அருமருந்தாம்!!

Divya

Don't take it for granted that it's a mango!! These are the medicines used by our forefathers!!

மாவிலை தான் என்று சாதாரணமாக நினைக்காதீர்கள்!! இவை நம் முன்னோர்கள் பயன்படுத்திய அருமருந்தாம்!!

பெரும்பாலானோர் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று மாம்பழம்.இப்பழம் மஞ்சள் நிறத்தில் அதிக வாசனை மற்றும் சுவை நிறைந்தவையாகும்.மாம்பழம் உடலுக்கு சில ஆரோக்கிய நன்மைகளை இருப்பதை போல் மாமரத்தின் இலைகளின் ஏகப்பட்ட மருத்துவ குணங்களை நிறைந்திருக்கிறது.நம் முன்னோர்கள் மாவிலையை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.

மாவிலை தோரணம் கட்ட மட்டும் தான் பயன்படும் என்று இன்றுவரை நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் இவை சர்க்கரை நோய்,சிறுநீரக தொற்று,பித்தப்பை கல் உள்ளிட்ட பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது.

வளர்ச்சிதை மாற்றம்

ஒரு கிளாஸ் வெந்நீரில் 1/4 தேக்கரண்டி மாவிலை பொடி சேர்த்து குடித்து வந்தால் வளர்ச்சிதை மாற்றம் கட்டுப்படும்.

இரத்த சர்க்கரை நோய்

கொழுந்து மாவிலையை ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தீப்புண்,காயம்

மாவிலையை எரித்து சாம்பலாக்கி தீப்புண்,காயம் ஏற்பட்ட இடத்தில் பூசினால் அவை சில தினங்களில் சரியாகி விடும்.

மாவிலை சாம்பலை தேங்காய் எண்ணையில் குழைத்து காயம்பட்ட இடத்தில் அப்ளை செய்தால் அவை சில தினங்களில் குணமாகி விடும்.

முடி உதிர்தல்

மாவிலையை அரைத்து பேஸ்டாக்கி உச்சந்தலையில் அப்ளை செய்து குளித்து வந்தால் முடி உதிர்தல் பாதிப்பிற்கு தீர்வு கிடைக்கும்.

சிறுநீரக கல்

ஒரு கப் நீரில் ஒரு தேக்கரண்டி மாவிலை பொடி சேர்த்து குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறும்.

பித்தப்பை கல்

மாவிலையில் கசாயம் செய்து குடித்து வந்தால் பித்தப்பையில் உள்ள கற்கள் கரைந்து விடும்.

வயிற்றுப்போக்கு

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி மாவிலை பொடியை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

வயிற்று வலி

ஒரு கிளாஸ் நீரில் சிறிது மாவிலை சூரணம் சேர்த்து குடித்தால் வயிற்றுவலி குணமாகும்.