இந்த கசப்பு காயை சாதாரணமாக நினைக்காதீங்க!! இதை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்!!

Photo of author

By Divya

இந்த கசப்பு காயை சாதாரணமாக நினைக்காதீங்க!! இதை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்!!

Divya

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பாகற்காய் பயன்பாட்டில் இருந்து வருகிறது.கொடி வகையான பாகற்காய் கசப்பு சுவை நிறைந்த உணவுப் பொருளாகும்.இந்த பாகற்காய் மற்றும் பாகல் இலை ஆயுர்வேதத்தில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இதன் சுவை கசப்பாக இருக்கின்றது என்ற காரணத்தினாலே சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ஒதுக்கி வைக்கின்றனர்.ஆனால் இந்த கசப்பு நிறைந்த காய் பல்வேறு நோய்களுக்கு அற்புத மருந்தாக திகழ்கிறது.

பாகற்காய் ஊட்டச்சத்துக்கள்:

**நார்ச்சத்து
**வைட்டமின் ஏ
**தாதுக்கள்
**பொட்டாசியம்
**வைட்டமின் சி

பாகற்காய் நன்மைகள்:

1)நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பாகற்காயை உட்கொள்ளலாம்.இதில் வைட்டமின் சி,நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது.

2)கல்லீரல் கழிவுகளை அகற்ற பாகற்காய் ஜூஸ் செய்து பருகலாம்.இதயத்தில் கெட்ட கொழுப்பு சேராமல் இருக்க பாகற்காய் சாறு பருகலாம்.

3)இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க பாகற்காய் ஜூஸ் செய்து குடிக்கலாம்.பாகற்காய் உணவால் உடல எடையை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

4)குடலில் உள்ள புழுக்களை வெளியேற்ற பாகற்காய் உட்கொள்ளலாம்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்க பாகற்காய் உணவுகளை உட்கொள்ளலாம்.

5)முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த பாகற்காய் ஜூஸ் பருக வேண்டும்.பாகல் இலை சாறை அரைத்து புண்கள் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

6)இரைப்பை புண்களை குணப்படுத்திக் கொள்ள பாகற்காய் ஜூஸ் பருகலாம்.வயிற்றில் உள்ள கிருமிகளை வெளியேற்ற பாகல் ஜூஸ் செய்து பருகலாம்.

7)சாம்பாரில் பாகற்காய் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.பசியின்மை பிரச்சனை இருப்பவர்கள் பாகற்காயை அரைத்து ஜூஸ் செய்து பருகினால் பசி அதிகரிக்கும்.

8)உடலில் பித்த அளவை குறைக்க பாகற்காய் சாறு தினம் ஒரு கிளாஸ் பருகலாம்.நாக்கு பூச்சிகள் ஒழிய பாகற்காய் சாறு பருகலாம்.அதேபோல் ஆசனவாயில் பாகல் இலை சாற்றை பிழிந்துவிட்டால் புழுக்கள் துடிதுடித்து வெளியேறும்.