கல்லீரல் கர்ப்பப்பை பலமாக்கி வாய்ப்புண் வயிற்றுப்புண் குணமாக்கும் இந்த சூப்பை சாதாரணமாக நினைக்காதீங்க!
வாய் மற்றும் வயிற்றில் புண் வருவது சாதாரண விஷயங்கள்தான். ஆனால் அடிக்கடி வந்தாலும் அதை கவனிக்காமல் விட்டாலும் பெரிய பாதிப்பில் கொண்டு சென்று விட்டு விடும். சாதாரணமாக உதடு வாய்ப்பகுதியில் ஏற்படும் இந்த புண் நாளடைவில் வயிற்றுப் பகுதியில் முழுமையாக பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
ஊட்டச்சத்து குறைபாடு உடையோர், நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு உடையவர்கள், வெற்றிலை பாக்கு போடுபவர்கள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளவர்கள் ஆகியோருக்கு வாய்ப்புண்கள் ஏற்படலாம்.
இந்தப் புண்களை சரி செய்யக்கூடிய எளிய வீட்டு வைத்திய முறைகளை தற்போது பார்ப்போம்.
* அடுப்பில் ஒரு அகன்ற பாத்திரத்தை வைத்து அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விடவும். பிறகு அரை ஸ்பூன் சீரகம் போடவும். சீரகம் பொரிந்ததும் 4 சின்ன வெங்காயத்தை தோலுரித்து சிறியதாக நறுக்கி போடவும்.
* அடுத்து 4 பூண்டு பற்களை தோல் உரித்து நறுக்கி போடவும். இவைகள் நன்றாக வதங்கியதும் அடுத்து ஒரு தக்காளியை சிறியதாக நறுக்கி போடவும். தக்காளி வதங்கியதும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பின்னர் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் போடவும்.
* பின்னர் ஒரு கைப்பிடி அளவு நன்றாக தண்ணீரில் அலசி சுத்தம் செய்த மணத்தக்காளி கீரையை போடவும். மணத்தக்காளி கீரையில் ஏராளமான நன்மைகள் உள்ளன. காய்ச்சல் வந்து நமது உடல் பலவீனமாக இருக்கும் சமயங்களில் மணத்தக்காளி கீரையை அரைத்து சாறு எடுத்து நெற்றியில் பற்றும், கை கால்களில் வலி உள்ள இடங்களில் தடவையும் வந்தால் முற்றிலும் குணமாகும்.
* காசநோய் உள்ளவர்கள், கல்லீரல் பிரச்சனை மற்றும் மஞ்சள் காமாலை உள்ளவர்கள் இந்தக் கீரையை தண்ணீரில் போட்டு வேகவைத்து குடித்து வர வேண்டும்.
* சிறுநீரக கற்களை கரைக்கும். கர்ப்பப்பையில் உள்ள நச்சுக்களை நீக்கி கர்ப்பப்பையை பலமாக்கும். இதேபோல் ஆண்களுக்கும் நரம்புகளை பலமாக்கும். புற்றுநோய் தாக்கத்தையும் குறைக்கும்.
* அடுத்து கொதிக்கின்ற சூப்பில் தேவையான அளவு உப்பு மற்றும் அரை ஸ்பூன் மிளகை தட்டி சேர்க்கவும். பிறகு இறக்கி வைத்து வடிகட்டாமல் அப்படியே பருகலாம். இதை அப்படியே முழுவதும் எடுத்து குடிக்காமல் சிறிது சிறிதாக குடிக்க வேண்டும். அவ்வளவு பயன்கள் இதில் உள்ளன.