cricket: யின் டெஸ்ட் கேப்டன்சியில் குழப்பம் நிலவி வரும் நிலையில் இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்று கைஃப் கூறியுள்ளார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.
இந்த தொடரில் முதல் மற்றும் கடைசி போட்டியில் கேப்டனாக பும்ரா செயல்பட்டு வந்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி தற்போது டெஸ்ட் அணியின் கேப்டனாக தேர்வு செய்ய வேண்டும் என குரல்கள் எழுத்து வரும் நிலையில் அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விளையாடுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கைப் கூறுகையில் அவருக்கு மட்டுமே சுமை அதிகமாக உள்ளது. அவரை மட்டுமே இந்திய அணி நம்பி உள்ளது போல் உள்ளது. மேலும் அவர் போன முறை காயம் ஏற்பட்ட போது இரண்டு ஆண்டுகள் அணியில் விளையாட வில்லை. அதனால் அவர் மீது நம்பிக்கை வைப்பதை மறந்து விடுங்கள். நீங்கள் இந்திய டெஸ்ட் அணியை பொறுத்த வரை ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் இருவரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கலாம். அவர்களுக்கு ஐ பி எல் போட்டியிலும் கே எல் ராகுல் சர்வதேச போட்டிகளிலும் கேப்டனாக இருந்துள்ளார்.