நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் அறுசுவைகளில் ஒன்றுதான் உப்பு.உணவில் காரம் மற்றும் மற்ற சுவைகள் குறைவாக இருந்தால்கூட அனுசரித்து சாப்பிடலாம்.ஆனால் உப்பு என்ற சுவை மட்டும் குறைந்தால் மொத்த உணவின் சுவையும் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.நம் முன்னோர்கள் காலத்தில் உப்பை ஒரு மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் காலப்போக்கில் உணவுகளில் பயன்படுத்த மக்கள் தொடங்கிவிட்டனர்.கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படும் கல் உப்பில் சோடியம் குளோரைடு நிறைந்து காணப்படுகிறது.இந்த உப்பு சுவை எடுத்துக் கொள்ளும் அளவு வயதிற்கு ஏற்ப மாறுபடும்.
முன்பெல்லாம் உப்பு மருந்து பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தது.ஆனால் தற்பொழுது உப்பில் அதிக கலப்படம் நடப்பதால் அது உயிருக்கு ஆபத்தானவகையாக மாறி வருகிறது.நாம் கடைகளில் வாங்கும் உப்பை நேரடியாக பயன்படுத்தினால் அவை ஆபத்தானதாக மாறிவிடும்.உப்பில் இருக்கின்ற நச்சுகள் நம் உடலுக்குள் சென்று பல தொந்தரவுகளை கொடுக்கும்.
எனவே உப்பை நாம் முறையாக பயன்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது.நம்மில் பலரும் உப்பை நேரடியாகத் தான் சமையலில் பயன்படுத்தி வருகின்றோம்.ஆனால் இனி இப்படி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நம் முன்னோர்கள் காலத்தில் உப்பை சட்டியில் கொட்டி பொன்னிறமாக வறுத்து பயன்படுத்தி வந்தனர்.இதனால் உப்பில் இருக்கின்ற நசச்சுக் கழிவுகள் நீங்கிவிடும்.அதேபோல் உப்பை தண்ணீரில் கொட்டி கரைத்து அந்த நீரை சமையலுக்கு பயன்படுத்தினால் உப்பு நச்சுக்கள் கலக்கப்படாமல் இருக்கும்.
அதேபோல் உப்பை சட்டியில் கொட்டி முருங்கை கீரை போட்டு வறுத்தால் உப்பின் நச்சுத் தன்மை நீங்கிவிடும்.முருங்கை கீரையை நீக்கிவிட்டு உப்பை பாட்டிலில் கொட்டி பயன்படுத்தலாம்.தூள் உப்பிற்கு பதில் கல் உப்பை அரைத்து பயன்படுத்தலாம்.தற்பொழுது ராக்சால்ட் பயன்பாடு அதிகரித்து வருகிறது.இந்த ராக்சால்ட்டையும் வறுத்து பயன்படுத்துவதே சிறந்தது.