வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடே வேண்டாம்.. மத்திய அரசை வைத்து மறைமுகமாக எதிர்க்கும் திமுக!! 

0
233
Don't want reservation for Vanniyars.. DMK is indirectly opposing the central government!!
Don't want reservation for Vanniyars.. DMK is indirectly opposing the central government!!

 

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடே வேண்டாம்.. மத்திய அரசை வைத்து மறைமுகமாக எதிர்க்கும் திமுக!!

சட்டப்பேரவை கூட்ட தொடரானது கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கியது.முன்பே தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் விவரம் குறித்த விவாதம் நடைபெற்றும் வருகிறது. அந்த வகையில் இன்று வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு குறித்து பாமக எம்எல்ஏ ஜிகே மணி கேள்வி எழுப்பினார்.அவருக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்றால் அதற்கு மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.இது குறித்து மத்திய அரசுக்கு  கோரிக்கை விடுத்து இந்த கூட்டத்தொடரில் உடனடி தீர்மானம் இயற்றப்படும் என்று தெரிவித்தார்.

இந்த பதிலை கேட்டதும் பாமக நிர்வாகிகள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.மேற்கொண்டு பாமக நிர்வாகி ஜி கே வாசன் கூறுவதாவது, மற்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசின் உதவி இல்லாமல் அவர்களே எடுத்துக் கொண்டனர்.இதற்கு முன் உதாரணமாக ஒடிசா எனத் தொடங்கி பிஹார் வரை பல மாநிலங்கள் உள்ளது.அந்த வகையில் தமிழக அரசும் இதனை தாமாகவே முயற்சிக்கலாம்.ஆனால் தமிழக அரசு இதனை மேற்கொள்ள விரும்பவில்லை.

சாதி வாரி கணக்கெடுப்பும் மக்கள் தொகை கணக்கெடுப்பும் வேறு.தலையை எண்ணி சொல்வது எப்படி சாதிவாரி கணக்கெடுப்பாகும்.அந்தந்த சாதிகளில் பிற்படுத்தப்பட்டோர் இருப்பர்,அவர்களை தான் சாதி வாரி கணக்கெடுப்பில் வறுமைக்கோட்டுக்கு கீழ் என்ற கணக்கில் கொண்டு வர முடியும்.ஒவ்வொரு சாதிகளிலும் நலிந்த பிரிவினர் என்பது இருக்கும்.அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மேலோக்கி கொண்டு வரும்பொழுது தான் தமிழகம் முன்னேறும். இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி பிரச்சனை இதனை முறையாக கையாள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் சாதிவாரி கணக்கெடுப்பு என்ற பேச்சை எடுத்தாலே திமுக அதனை தட்டிக்கழிப்பது வழக்கமான ஒன்று.கடந்த முறையை போலவே இம்முறையும் மத்திய அரசிடம் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கோரிக்கை வைக்கப்படும் என்ற பிடிப்பில்லா தீர்மானத்தையே நிறைவேற்றியுள்ளது.