சமீப காலமாக தேமல்,படை,சொறி சிரங்கு,வெண்புள்ளி போன்ற தோல் நோய்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.சுற்றுசூழல் மாசு,கெமிக்கல் அழகு சாதனங்கள் மற்றும் உணவுமுறைகளால் இவை ஏற்படுகிறது.
இது போன்ற தோல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் இருப்பவர்களுடன் தோல் தொடர்பு கொண்டால் அவை நமக்கும் தோற்றிவிடும்.கடுமையான நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு தோல் சார்ந்த பிரச்சனைகள் எளிதில் ஏற்படக் கூடும்.
தேமல்,சொறி சிரங்கு,படை போன்றவற்றால் தோல் சிவத்தல்,நமைச்சல்,தடிப்பு,அரிப்பு போன்றவை ஏற்படுகிறது.சொறி சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு சிறந்த வீட்டு வைத்தியம் தரப்பட்டுள்ளது.
*வேப்பிலை
*மஞ்சள்
கொழுந்து வேப்பிலையை அரைத்து மஞ்சள் தூள் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.
*செருப்படை இலை
*சின்ன வெங்காயம்
சிறிது செருப்படை இலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இரண்டு சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.இவை இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்து சரும அலர்ஜி உள்ள இடத்தில் பூசி வந்தால் அவை சீக்கிரம் சரியாகிவிடும்.
*செருப்படை இலை
தினமும் குளிப்பதற்கு முன்னர் செருப்படை இலையை அரைத்து சருமத்தில் அப்ளை செய்து குளித்தால் தேமல்,சொறி சிரங்கு,படை,வெண்புள்ளி,படர் தாமரை போன்ற பாதிப்புகள் குணமாகும்.
*குப்பைமேனி இலை
*கிராம்பு எண்ணெய்
ஒரு கைப்பிடி குப்பைமேனி இலையை அரைத்து கிராம்பு எண்ணெய் கலந்து சருமத்தில் பூசி குளித்து வந்தால் தேமல்,தோல் அலர்ஜி உள்ளிட்டவை குணமாகும்.அதேபோல் கற்றாழை ஜெல்லில் மஞ்சள் கலந்து உடலில் பூசி குளித்து வந்தால் தோல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் நீங்கும்.