சர்க்கரை நோயாளிகளே கவலை வேண்டாம்? இந்த காயை மட்டும் உனவில் சேர்த்தது கொண்டால் போதும்!

0
167

 

சர்க்கரை நோயாளிகளே கவலை வேண்டாம்? இந்த காயை மட்டும் உனவில் சேர்த்தது கொண்டால் போதும்!

சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் தினசரி இந்த காய்கறிகளை தவறாமல் சாப்பிடுங்கள்.தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடிய சர்க்கரை நோய், இளம் வயது உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது.

இதனை நாம் அலட்சியமாக எடுத்துக் கொண்டால் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். எனவே தினசரி அன்றாடும் வாழ்வில் எடுத்துக் கொள்ளக்கூடிய காய்கறி வகைகளில் முக்கியமாக சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்தும் உணவுகளை பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.

வெண்டைக்காய் சர்க்கரை நோயினால் அவதிப்படக் கூடியவர்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளுடன் வெண்டைக்காயினை சேர்த்துக் கொள்வது நல்லதாகும். இதில் உள்ள பொட்டாசியம், வைட்டமின், போலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

அதிக நார்ச்சத்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோயினால் அவதிப்படக்கூடியவர்கள் தினசரி வெண்டைக்காய் உணவுகளுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வருவதன் காரணமாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

பாகற்காய் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு பாகற்காய் ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது. பாகற்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடர்கள் இன்சுலின் சுரக்கும் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ம ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பாதுகாக்கின்றது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது பாவற்காய் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

 

Previous articleதனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு வந்து சேரும் நாள்!!
Next articleமகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான சூழ்நிலைகளை காணும் நாள்!!