கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா கவலை வேண்டாம்! சிறிய வெங்காயம் இருந்தால் போதும்!

0
346
#image_title

கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா கவலை வேண்டாம்! சிறிய வெங்காயம் இருந்தால் போதும்!

தற்போது உள்ள காலகட்டத்தில் ஆண் பெண் இருவருக்கும் முடி உதிர்தல் அதிகமாக இருக்கிறது. ஆண் பெண் இருபாலரும் முடி அதிகமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது ஆசையாக இருக்கும். மேலும் கெமிக்கல் நிறைந்த ஹேர் ஆயில், ஷாம்பூ, போன்றவற்றை பயன்படுத்துவதால் அதிகப்படியான முடிகள் கொட்டத் தொடங்கும். அது மட்டுமல்லாமல் நம் உடலில் முடிகளுக்கு தேவையான சத்துக்கள் அதாவது இரும்புச்சத்து, கால்சியம் ,வைட்டமின் டி, வைட்டமின் இ ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி ,சத்துக்கள் குறைவாக இருப்பது.

மேலும் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தாலும் இந்த முடி உதிர்வு ஏற்படக்கூடும். அதிகமாக கோபம் ,டென்ஷன் போன்ற பிரச்சனைகளாலும் இந்த முடி உதிர்தல் உண்டாகக்கூடும்.

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு படுத்தி அதில் 1/2 லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு பத்து சின்ன வெங்காயத்தை உரலில் போட்டு தட்டி அந்த எண்ணெயுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த எண்ணெய் நன்றாக கொதிக்க வேண்டும். பிறகு அந்த எண்ணையை தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை முற்றிலும் குணமாகிறது. மேலும் தலையில் பொடுகு ,பேன் அரிப்பு போன்றவை இருந்தாலும் இந்த எண்ணெயை தேய்த்துக் கொள்வதன் மூலம் இது போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

இந்த எண்ணெயை 2 முதல் 3 மாதங்கள் வரை தினமும் தேய்த்து வந்தால் முடி கொட்டுதல் பிரச்சனை முற்றிலும் நின்றுவிடும். இந்த எண்ணையை முடியின் அடிப்பகுதியில் இருந்து தேய்த்து மசாஜ் செய்து கொள்ள வேண்டும். மேலும் நல்லெண்ணெயும் கூட பயன்படுத்தலாம். இந்த எண்ணையை குளிக்க போகும் முன் அரை மணி நேரம் தேய்த்து பிறகு குளிக்க வேண்டும். வெங்காயத்தை நேரடியாக தலையில் அரைத்து தடவுதல் கூடாது அதில் சல்பர் உள்ளது.

Previous articleஎடப்பாடியை சீன்டும் ஓபிஎஸ் யின் ஆதரவாளர் மருது அழகுராஜ்!!
Next articleசர்க்கரை நோயை துரத்தி அடிக்கும் ட்ரிங்க்! ஆறு பொருட்கள் இருந்தால் போதும்!