சர்க்கரை நோயை துரத்தி அடிக்கும் ட்ரிங்க்! ஆறு பொருட்கள் இருந்தால் போதும்!

0
165
#image_title

சர்க்கரை நோயை துரத்தி அடிக்கும் ட்ரிங்க்! ஆறு பொருட்கள் இருந்தால் போதும்!

இந்த சர்க்கரை நோயால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் பயன்படுத்தாமல் இந்த இயற்கையான மூலிகையை வைத்து எவ்வாறு சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம்.

முதலில் 100 கிராம் அளவு வெந்தயம் ,200 கிராம் அளவு கருப்பு சுண்டல், இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக 7 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு இதனை தனித்தனியாக முளைகட்டி வைக்க வேண்டும். பிறகு ஒரு நாள் கழித்து பார்த்தால் இது நன்றாக முளைக்கட்டி இருக்கும். முளைகட்டிய பயிரை காய வைக்க வேண்டும். ஐந்து நாட்கள் காய வைத்தால் போதுமானது.

இந்த இரண்டு பொருட்களும் காய்ந்த பிறகு இதனுடன் நெல்லிவற்றல் 200 கிராம், நாவல் கொட்டை 100 கிராம், மருதம்பட்டை 50 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம், இந்த ஆறு பொருளையும் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த அரைத்த பொடியுடன் மேலும் மாம் பருப்பு பொடியை 100 கிராம் அளவு சேர்க்க வேண்டும். பிறகு வேப்பிலை சூரணம் பொடி 50 கிராம் அளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் சேர்த்து காலை ,மாலை வெறும் வயிற்றில் சர்க்கரை நோயாளிகள் குடித்து வர ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும், சிறுநீரகத்தில் உள்ள சர்க்கரை அளவும் 15 நாட்களில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிகிறது.