தமிழகத்தில் லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் படித்துவிட்டு அரசு பணிக்காக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இவ்வாறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் பொழுது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு ஒரு புறம் தங்களுடைய போட்டி தேர்வுகளுக்கான படிப்புகளை கவனித்த வண்ணம் இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு மையத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்திருந்தால் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகிறது தமிழக அரசு.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பில் வெளியிட்டிருப்பதாவது :-
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காக போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கக்கூடிய இளைஞர்கள் மாதந்தோறும் உதவித் தொகையை நேரடியாக அவர்களுடைய வங்கி கணக்கிலேயே பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இவ்வாறு விண்ணப்பிக்க கூடியவர்களுக்கு தகுதியாக வேலை வாய்ப்பு மையத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்திருந்தால் மட்டுமே போதும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.
இதில் குறிப்பாக 9 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மாதம் 200 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருவதாகவும், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 300 ரூபாய் வழங்கப்படுவதாகவும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 400 ரூபாய் வழங்கப்படுவதாகவும், பட்டம் பெற்ற மாணவர்களுக்கு 600 வழங்கப்படுவதாகவும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிக்க தேவையான சான்றுகள் :-
✓ கல்விச்சான்றிதழ்கள்
✓ வேலைவாய்ப்பு அடையாள அட்டை
✓ வருமானவரிச் சான்று
✓ ஆதார் அட்டை
✓ வங்கி கணக்கு புத்தக நகல்
✓ சுய உறுதிமொழி ஆவணம்
மேல்கூறப்பட்ட ஆவணங்கள் உடன் சுய உறுதிமொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு தபால் வழியாக தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருக்கிறார்.