இடுப்பு வலியை தடுக்கும் தோப்புக்கரணம்!!! தினமும் 10 தோப்புக்கரணம் போட்டால் இத்தனை நன்மைகளா!!?

Photo of author

By Sakthi

இடுப்பு வலியை தடுக்கும் தோப்புக்கரணம்!!! தினமும் 10 தோப்புக்கரணம் போட்டால் இத்தனை நன்மைகளா!!?

Sakthi

இடுப்பு வலியை தடுக்கும் தோப்புக்கரணம்!!! தினமும் 10 தோப்புக்கரணம் போட்டால் இத்தனை நன்மைகளா!!?

தினமும் 10 முறை தோப்புக்கரணம் போட்டால் இடுப்பு வலி குறைவது முதல் மூளை செயல்பாடுகள் அதிகரிப்பது வரை பல நன்மைகள் கிடைக்கின்றது.அந்த நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

தோப்புக்கரணம் என்பது தற்பொழுது ஒரு தண்டனையாக பார்க்கப்படுகின்றது. ஆனால் தோப்புக்கரணம் என்பது ஒரு வகை உடல் பயிற்சி ஆகும். இதன் மூலம் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. நடிகர் சமுத்திரக்கனி நடித்த சாட்டை படத்தில் கூட தோப்புக்கரணம் பற்றிய காட்சி ஒன்று இருக்கும்.

அதாவது நடிகர்.சமுத்திரக்கனி அந்த திரைப்படத்தில் ஆசிரியர்க நடித்திருப்பார். இதையடுத்து மாணவர்களை தோப்புக்கரணம் போடச் சொல்வார். பின்னர் அதற்கு “தோப்புக்கரணம் போடுவதால் மூளை புத்துணர்ச்சி அடைகின்றது. மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்” என்று கூறியிருப்பார். அதே போல இந்த பதிவில் தினமும் 10 தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தோப்புக்கரணம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்..

* நாம் தோப்புக்கரணம் போடும் பொழுது நமது காது மடல்களை பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடுகிறோம். இதனால் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கின்றது.

* தோப்புக்கரணம் போடும் பொழுது நாம் உட்கார்ந்து எழுந்து நிற்கிறோம். இதனால் கால்களில் உள்ள சோலியஸ் எனும் தசை இயங்கத் தொடங்குகின்றது.

* தினமும் 10 முறை தோப்புக்கரணம் போடுவதால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

* தினமும் 10 முறை தோப்புக்கரணம் போடும் பொழுது மூளையில் உள்ள நியூரான் செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றது. இதனால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். மூளை வேகமாக செயல்பட தொடங்கும்.

* தினமும் 10 முறை தோப்புக்கரணம் போடுவதால் மன இறுக்கம், மன அழுத்தம் குறைகின்றது. மேலும் அது தொடர்பான நோய்கள் அனைத்தும் குணமாகின்றது.

* தினமும் பத்து முறை தோப்புக்கரணம் போடுவதால் இடுப்பில் உள்ள எலும்பு, தசை, ஜவ்வு ஆகியவை வலிமை பெறுகின்றது. இதனால் இடுப்பு வலி வராமல் தடுக்கப்படுகின்றது.

* கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் தோப்புக்கரணம் போடும் பொழுது பிரசவம் எளிமையாகும்.