வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

0
173
#image_title

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

*வீட்டில் அரிசியும், கல் உப்பும் குறையாதிருந்தால் தரித்திரம் வராது. செல்வம் குறையாது.

*காலையில் எழுந்த உடன் முதல் வேலையாக புளியை தொட்டால் ஐஸ்வர்யம் நீங்கி விடும்.
கல் உப்பை தொட்டால் செல்வம் பெருகும்.

*அரிசியையும், அன்னத்தையும் சிந்தவோ, வீணாக்கவோ கூடாது. செல்வ குறைவு வரும்.

*ரசம் போன கண்ணாடி அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தாது. அதை வீட்டில் வைத்துக் கொள்ளாதீர்கள்.

*பூஜை அறையில் உடைந்த சாமி படங்கள், காய்ந்த மலர்களை வைக்கக் கூடாது.

*வீட்டில் கிழிந்த ஆடைகள் வைத்திருக்கவோ, பயன்படுத்தவோ கூடாது.

*பூஜை அறையில் ஒட்டடை இருந்தால் செல்வம் குறையும்.

*வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கினால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.

*பணத்தை சட்டை பாக்கெட்டில் இருதயத்திற்கு அருகில் வைப்பது நல்லது.

*செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை வீட்டை துடைத்தால் செல்வம் குறையும்.

*வீட்டில் பெண்கள் கண்ணீர் விட்டு அழுதால் பண நஷ்டம் ஏற்படும்.

*பூஜை அறையில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் பயன்படுத்துவது நல்லது.

*இரவில் வீட்டை பெருக்கி குப்பைகளை வெளியே வாரி வீசக் கூடாது.

*பெண்கள் கவிழ்ந்து கிடந்து தூங்கக் கூடாது.

*வடக்கே தலை வைத்துப் படுத்து தூங்கக் கூடாது.

*கல் உப்பை கடனாக கொடுக்கக் கூடாது. இவ்வாறு செய்தால் செல்வம் குறையும்.

*வீட்டில் சண்டை சச்சரவு இருக்கக் கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.

Previous articleநாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!
Next articleநுரையீரலில் படிந்து கிடக்கும் சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!!